நில கையகப்படுத்தும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை காத்திருக்க முடியாது என்பதால் சில மாநிலங்கள் அவற்றுக்கென தனியாக சட்டத்தைக் கொண்டு வர ஆர்வம் காட்டுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ. ஆளும் மாநிலங்கள் மற்றும் வேறு சில மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதலை பெறுவதில் மத்திய அரசு தோல்வியடையும் பட்சத்தில், அது மாநிலங்களின் முடிவுக்குவிடப்படும். தங்களது மாநிலத்தில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தவிரும்பும் மாநிலங்கள், தங்களுக்கு சொந்தமாக சட்டம் கொண்டுவரலாம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.
மத்திய அரசு எடுத்தமுடிவில் இருந்து பின்வாங்க வேண்டாம் என பிரதமர் கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சி விவகாரத்தில், மத்திய அரசு சமரசம் செய்துகொள்ளாது. விவசாயிகளின் நலனையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு அனைத்து ஆலோசனைகளையும் மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அருண் ஜேட்லி கூறினார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.