பல புதிய திட்டங்கள் உருவாக பொன்னாரே காரணம்

 கன்னியா குமரி மாவட்டம், சுசீந்திரத்தில் ரூ.7.50 கோடி செலவில் அமையவிருக்கும் புதியபாலத்துக்கான அடிக்கல்லை நாட்டிப்பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தான் காரணம் என புகழாரம் சூடியுள்ளார். .

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ் சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய சாலைகள் அமைக்கும் 10 திட்டங்களை துவக்கி வைத்துப்பேசியதாவது,

இன்றைய தினம் 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியி ருக்கிறோம். பல புதிய திட்டங்களை உருவாக்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்தான் காரணம். தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து தொடர்ந்து என்னிடம் கூறுவார். அதன் அடிப்படை யிலேயே இந்த புதியதிட்டங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது . சாலை திட்டபணிகளுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை.
தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பலமுக்கிய திட்டப்பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கட்கரி கூறினார்.

இந்தியாவின் தென்கோடி பகுதியான கன்னியா குமரியை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் மிகமுக்கியமான பாலம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது. இந்தப்பாலம் 1935ஆம் ஆண்டு திரு விதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ்பிலிப் என்ற ஆங்கிலேயப் பொறியாளரால் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

80 ஆண்டு பழைமையான இந்தப்பாலம் அன்றைய வாகன போக்குவரத்துக்கு போதுமானதாக இருந்தது. இப்போது பலமடங்கு வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இந்தப்பாலத்தை கடந்துசெல்ல கடந்த 20 ஆண்டுகளாக நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். எனவே, இங்கு பெரியளவிலான புதியபாலம் வேண்டுமென பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடுத்து வந்த துரித நடவடிக்கையின் விளைவாக, குமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு நனவாகும் விதத்தில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் சுசீந்திரத்தில் விரிவான புதிய பாலத்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...