மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் கூட்டணியில் பாமக வெவ்வேறு கொள்கைகளை கடைப்பிடிக்கிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கேட்டுக் கொண்டார்.
பாஜக சார்பில் ஈரோட்டில் நடந்த மக்கள்தொடர்பு இயக்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழிசை சௌந்தரராஜன் நேற்று கோவைவந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பங்கினால் தான் தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெற்றது என்பதை உணரவேண்டும். தேசியத்தில் கூட்டு, மாநிலத்தில் கூட்டு இல்லை என்பதை யாரும் நம்பமாட்டார்கள். எனவே வேறுபாட்டுத்தனமாக பேசுவதை அந்தக்கட்சி கைவிட வேண்டும்.
இரு திராவிட கட்சிகளின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் பாமகவுக்கு உண்மையாக இருந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும்.
தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. அனைத்துத் துறை களிலும் ஊழல் பெருகியுள்ளது. அதானி குழுமத்துடன் மின்சார ஒப்பந்தத்தை எந்த அடிப்படையில் செய்து கொண்டது என்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிக்கையை வெளியிடவேண்டும்.
அதானி குழும விவகாரத்தில் வைகோ, இளங்கோவன் போன்றவர்கள் அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் வியாபம் ஊழல் என்பது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
பாஜக முதல்வர்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பாஜகவினர் குற்றமற்றவர்கள் என்பது விசார ணையில் தெளிவுபடுத்தப்படும்.
தமிழக காய்கறிகள் பரிசோதனை செய்து அதில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பாதிப்பில்லை என்பதை கேரள அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இங்கு, காய்கறி, மருந்துகள், பால்போன்றவை பரிசோதிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
காய்கறிகள் விவகாரத்தில் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.