மோடி மீது மனித வெடி குண்டு தாக்குதல் நடத்த சதி

 பீகார் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி மீது மனித வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி பீகாரின். பாட்னா மற்றும் முசாபர் நகரில் நடைபெறும் இரண்டு பொதுக்கூட்ட பேரணிகளில் கலந்துகொள்கிறார். பீகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், மோடி பாட்னா அல்லது முசாப்பர் பூர் பயணத்தின் போது அவர் மீது மனிதவெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், உஷாராக இருக்குமாறு மாநில போலீசார் மற்றும் சிறப்புபாதுகாப்பு குழுவினரிடம் மத்திய உளவுத் துறை தெரிவித்துள்ளதாக பீகார் மாநில மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

நன்கு பயிற்சிபெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், செய்தியாளர், போலீஸ் அதிகாரி, எலக்ட்ரீசியன், தொழிலாளர் வேஷத்தில் இந்ததாக்குதல் நடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. மத்திய உளவுத் துறை எச்சரிக்கையை அடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் வருகையொட்டி வரலாறுகாணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...