பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்வரை எங்கள் போராட்டம் தொடரும்

 பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்வரை எங்கள் போராட்டம் தொடரும் மதுவிலக்கு வேண்டும் என ஒவ்வொருவரும் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் 'எலைட்' மதுபான கடைகளை திறக்கப்போவதாக அரசு அறிவித்திருப்பது கண்டத்துகுரியது .என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

சென்னை பாஜக தலைமையகமான கமலால யத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பாஜக ஒரு மாற்றுசக்தியாக உருவெடுத்து வருகிறது. காமராஜர் பிறந்தநாள் விழாவை பாஜக கொண்டாட தகுதி இருக்கிறதா? என்று காங்கிரசார் சொல்கிறார்கள். நாட்டுக்காக தன்னலமற்று உழைத்த தலைவர்களை போற்றும்கட்சி பாரதிய ஜனதா, எனவே, காமராஜர் விழாவை கொண்டாட பாஜகவிற்கு தகுதி உள்ளது

திருச்சியில் ராகுல் காந்தி நேற்று பேசும்போது, இப்போதுதான் அவருக்கு வாய்ப்புகிடைத்தது போல் பேசி இருக்கிறார். பல ஆண்டுகள் பதவியில் இருந்த அவர்கள் எத்தனைமுறை காமராஜர் விழாவுக்கு வந்தார்கள்? ராகுலின் வரவு தமிழகத்தில் எந்ததாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.

புதிய மதுக் கொள்கையை கொண்டு வரப் போவதாக பேசி இருக்கிறார். அப்படியானால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எப்படிப்பட்ட மதுக் கொள்கையை வைத்திருக்கிறார்கள். ராகுல்கையில் அதிகாரம் இருந்தபோது இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அதை கண்டித்து அவர் நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை.

பூரண மது விலக்கை அமல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்தமாதம் மதுவிலக்கை கொண்டு வருவதற்கான அறிகுறி தென்படா விட்டால் மிகப்பெரிய போராட்டத்தை அறிவிப்போம்.

மதுவிலக்கு வேண்டும் என்று ஒவ்வொருவரும் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் 'எலைட்' மதுபான கடைகளை திறக்கப் போவதாக அரசு அறிவித்திருப்பது கண்டத்துக்குரியது. ஒரு கடைகூட திறக்க விடாமல் தடுப்போம்.

சினிமாக்களில் மதுகுடிக்கும் காட்சிகளையும், புகைபிடிக்கும் காட்சிகளையும் தடுக்கவேண்டும். மதுகுடிக்கும் காட்சிகள் உள்ள திரைப்படங்களுக்கு வரிச்சலுகை தரக்கூடாது.

ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபிறகும் ஆட்சியில் வேகமும் இல்லை. மாற்றமும் இல்லை. தண்ணீர் பற்றாக் குறை பயமுறுத்துகிறது. இதையெல்லாம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழகத்தில் 50 சதவீதம் ஏரிகள் முற்றிலும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக ஏரிகள் தூர்வாரப் படவில்லை என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...