மரியாதைக்குரிய திரு. நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வந்து நெசவாளப் பெருமக்களுக்கு பெருமை சேர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார் பல மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தை நோக்கி பாரத தேசத்திலிருந்து வந்த நெசவாளர்கள் பரிசு வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் நெசவாளர்கள் குடும்பத்தில் அனைவரும் ஒளியேற்ற வேண்டும் என்றும் நெசவாளக் குடும்பத்தில் உள்ள அத்தனை உணர்வுகளையும் உணர்ச்சி பொங்க எடுத்துரைத்திருக்கிறார்.
இவ்வாறு நம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இந்த நிகழ்ச்சிக்காக அக்கறையோடு வந்தவரை பல எதிர்க்கட்சியினர் கொச்சைப்படுத்தி பேசுவது வருந்தத்தக்கது மட்டுமல்ல. கண்டிக்கத்தக்கதும் கூட.
முதலில் நெசவாளர்களுக்காக சென்னை வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டது ஓர் நாகரிகமான அரசியலுக்கு எடுத்துக்காட்டு அல்ல. எல்லா விழாக்களும் டெல்லியில் நடைபெறுகிறது. அதனால் இந்த வாய்ப்பை ஒவ்வொரு மாநிலமும் பெற வேண்டும். எனினும் குறிப்பாக நெசவுத் தொழில் தொன்மை வாய்ந்தது நம் தமிழகம் என்ற பெருமையை நிலை நாட்ட நம் பிரதமர் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து நம் அரசாங்க நிகழ்ச்சிகளோடு நடத்தினார்.
ஆனால் அதை தவறாக சித்தரிப்பது கடுமையாக கண்டிக்கத்தகக்கது. அப்படியென்றால் இவர்கள் எல்லோரும் நெசவாளர்களுக்கு எதிரானவர்கள். குறிப்பாக இளங்கோவன் இந்த பயணம் முதலமைச்சரைச் சந்திப்பதற்கான பயணம் என்றும், பாஜக அதிமுக கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றும் நாகரிகமற்ற முறையில் பேசியிருக்கிறார்.
எதிர்க்கட்சியினராக இருந்தாலும் கட்சி எல்லை கடந்து, கொள்கை கடந்து ஓர் ஆரோக்கியமான நட்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் நாகரிகத்தின் குறியீடாக நடந்த இந்த சந்திப்பை, அரசியல் நாகரீகத்தை நாகரீகமற்று விமர்ச்சித்திருக்கிறார் இளங்கோவன் அவர்கள்.
அதுமட்டுமல்ல ஏழைகளைப்பற்றியே கவலைபடாத சிதம்பரம் மோடி அவர்கள் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஏழைகளுக்கான வங்கி கணக்குத்திட்டம், சாலையோர வியாபாரப் பெருமக்களுக்கு உதவும் முத்ரா வங்கித் திட்டம், ஏழைகளுக்காக வருடம் 12 ரூபாய் செலுத்தி காப்பீடாக 2 லட்சம் கிடைக்கும் காப்பீட்டுத் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் இப்படி ஏழைகளுக்காக எத்தனையோ திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கும் பிரதமரை இந்த அளவிற்கு விமர்சனம் செய்வதற்கு சிதம்பரம் எந்த அளவிற்கு ஏழைப்பங்காளராக இருந்தார் என்பதை இந்த நாடறியும்.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் சுமூகமான உறவு மக்களுக்கு நல்ல பலனைத் தரும் என்ற அடிப்படையிலேயே முதல்வர், பிரதமர் அவர்களின் சந்திப்பு நடந்தது. தனது உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது வந்து பிரதமரை வரவேற்றது, பிரதமராக இருந்தாலும் முதல்வரைச் சந்தித்தது என்று இருதலைவர்களும் ஓர் அரசியல் நாகரீகத்தை கடை பிடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் இத்தகைய ஆரோக்கியமான அணுகுமுறையைக் கொச்சைப் படுத்துபவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜக-வைக் கண்டு இவர்கள் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதே பாஜக தமிழகத்தில் உறுதிப்பிடிப்போடு வளர்ந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.
ஏழை நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு தமிழகத்தைத் தேர்ந்தெடுமைக்கு நம் பிரதமர் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளோம். அதுமட்டுமல்ல இந்த விழாவில் பல கோரிக்கை வைத்தார்.
குறிப்பாக ஒருநாளாவது கைத்தறி துணி உடுத்த வேண்டும், கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள் கூட ஒருநாளாவது கைத்தறி அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, திரைப்படத் துறையினரும் தங்கள் படங்களில் அதிகம் கைத்தறி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார். அனைத்தரப்பினரும், திரைப்படத்துறையினரும் இதைப் பின்பற்றி அனைத்து நெசவாளர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி; டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மாநில தலைவர்
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.