தமிழகத்தில் பாஜக சார்பில் தேர்தல்பணியை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், எப்பொழுது தேர்தல்வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் சென்னை வேளச்சேரியில் ரக்ஷாபந்தன் பண்டிகை சனிக் கிழமை சிறப்பாக கொண்டாடபட்டது. கொண்டாட்டத்தை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் துவங்கி வைத்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டத்தின் போது காப்புகயிற்றுடன் சேர்த்து காப்பீடு வழங்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாங்களும் தமிழகம் முழுவதும் நடக்கும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின்போது காப்புக்கயிறு கட்டுகையில் காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்து ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டை பரிசாக அளிக்கிறோம்.
தமிழகத்தில் பாஜக தேர்தல்பணியை ஏற்கனவே தொடங்கி விட்டது . ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கட்சி நிர்வாகி களுக்கான தேர்தல்பணி பயிற்சி முகாம் திருச்சி பெரம்பலூரில் நடக்கிறது. தமிழகத்தில் எப்பொழுது தேர்தல்வந்தாலும் அதைசந்திக்க பாஜக தயாராகவே இருக்கிறது . எந்த ஒருவிழாவையும் மக்களுக்கு நன்மை பயக்கும் விழாவாகவே பாஜக கொண்டாடி வருகிறது என்றார்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.