தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம் பாரததேசத்திற்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம்செய்து உழைத்த ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய கோரிக்கையை நிறை வேற்றி பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் தியாகத்திற்கு மிகப் பெரிய வணக்கத்தை தெரிவித்துள்ளார். 1973-ம் ஆண்டு நாட்டிற்காக தியாகம்செய்த ராணுவ வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய இத்தகைய ஓய்வூதியம் மற்றும் சலுகைகளும் அன்றைய காங்கிரஸ் அரசால் நீக்கப்பட்டது.
இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலும் ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது, இந்நாட்டின் மீதும், இந்த நாட்டிற்காக உழைத்தவர்கள் மீதும் பாஜக. எந்தளவு மரியாதை மட்டுமல்ல பக்தியும் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மக்களுக்கு எது நடந்தாலும் நடக்க இருந்தாலும் அதைத்தடுத்தே ஆக வேண்டும் என்று பணியாற்றி கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு இன்று குறைகூறியிருக்கிறது. அதற்கு அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. ராணுவ வீரர்களுக்கு நாட்டிற்காக உழைத்ததற்கு நன்றி தெரிவித்து இத்திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடிக்கும், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கும் நம் நன்றியை தெரிவித்து கொள்வோம்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.