நாங்கள் யாரையும் தொந்தரவுசெய்ய மாட்டோம், எங்களை தொந்தரவு செய்பவர்களுக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் போது எத்தனை தோட்டாக்கள் செலவாகின்றன? என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத்சிங், இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் , இந்தவளர்ச்சியை தடுக்க சில தேச விரோத சக்திகள் முயற்சித்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை சமீபத்தில் சந்தித்த போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்துவந்தது, இருந்து வருகின்றது, இனியும் இருந்துவரும் என நான் தெளிவுப் படுத்தியுள்ளேன். நீங்கள் ஏதாவது பேசவிரும்பினால், உங்களது (பாகிஸ்தான்) ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை பற்றி மட்டும் பேசுங்கள் எனவும் தெரிவித்துள்ளேன்.
யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்ற கொள்கையுடன் அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், எங்கள் மீது யாராவது துப்பாக்கி சூடு நடத்தினால் அவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம். நாங்கள் பதிலடி கொடுக்கும் போது எத்தனை தோட்டாக்கள் செலவாகின்றன? என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டோம் என ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.