அப்துல்கலாம் சாலையில் வசிப்பதை பெருமையாக கருதுகிறேன்

 டில்லியில், அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்ட பகுதியில் வசிப்பதில் பெருமைப்படுகிறேன்,'' என, மத்திய அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு பேசினார்.

தயக்கம்:டில்லியில் நடந்த புத்தகவெளியீட்டு விழாவில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், வெங்கையா நாயுடு பேசியதாவது:டில்லியில், 30, அவுரங்கசீப் சாலை என்ற முகவரியில்தான் வசித்து வந்தேன். முன்பு, என் முகவரியை யாருக்காவது தெரிவிக்கும் போது, தயக்கமும், கூச்சமும் ஏற்படும். இப்போது, அதெல்லாம் எதுவும் இல்லை; அந்தசாலை, அப்துல் கலாம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மண்ணின் மைந்தனும், முன்னாள் ஜனாதிபதியுமான, மறைந்த, அப்துல்கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பகுதியில் வசிப்பதில் பெருமைப் படுகிறேன். வெளிநாட்டை சேர்ந்தவரின் பெயருக்கு பதிலாக, இந்த மண்ணின் மைந்தனின் பெயர் சூட்டப் பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

'அவுரங்கசீப் சாலையை, பெயர் மாற்றம் செய்யவேண்டும்' என வலியுறுத்தியது, பா.ஜ.க.,வைச் சேர்ந்தவரோ, ஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களோ அல்ல . பாகிஸ்தானில் பிறந்து, தற்போது கனடாவில் வசிக்கும் தாரிக்படேல் என்ற பத்திரிகையாளர் தான், இதை வலியுறுத்தியவர். கடந்த, 2013ல், அவர், டில்லிக்கு வந்தபோது, நகரின் முக்கியமான பகுதிக்கு அவுரங்கசீப் சாலை என பெயர் சூட்டப் பட்டுள்ளதை பார்த்து, அதிர்ச்சி தெரிவித்தார்.

அவுரங்கசீப்பின் பெயருக்கு பதில் , அவர் சகோதரர் தாரா சிக்கோவின் பெயரை சூட்டவேண்டும் என, அந்த பத்திரிகையாளர் கூறினார்.

நம் நாட்டை ஏராளமான முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர். அவர்களில் பலர், நம் நாட்டுக்கு நன்மை செய்துள்ளனர். இதுதொடர்பான வரலாறுகள் தெளிவாக உள்ளன.

பிரிவினைக்கு பின், எல்லா முஸ்லிம்களுமே பாகிஸ்தானுக்கு சென்று விடவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள், இந்தியாவிலேயே, இந்தியர்களாக இருக்கவிரும்பினர். இந்து என்பது, ஒரு மதம் அல்ல; அது, ஒரு கலாசாரத்தின் அடையாளம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...