நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையங் களில் மாற்றம் அவசியமென மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டம், பொதல கூரு பகுதியில் ரூ.3.80 கோடி செலவில் 30 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டிய வெங்கய்ய நாயுடு, அங்கு நடந்த பொது கூட்டத்தில் பேசியதாவது:
நமது நாட்டில் 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும், அவை வளர்ச்சி பெறவில்லை. மாநில வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்தைவிட, தொழிற்சாலைகள், அணைகள் போன்றவையே முக்கியம். தற்போது அந்த 11 மாநிலங்கள் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசை நாடி வருகின்றன. நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம் படுத்தி, அதன் மூலம் மக்கள் பயனடைய வேண்டும். இதுவே மத்திய அரசின் கொள்கை.
மாணவர்களிடம் உள்ள திறனை வெளிக் கொண்டு வரவேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான மாற்றம் தேவை என்று அவர் பேசினார்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.