கொட்டும் மழையில் 600 கிமீ காரில் பயணம் செய்த வெங்கய்யா நாயுடு

 பிரான்ஸ் நாட்டில் வெங்கய்யா நாயுடுவின் விமான டிக்கெட் ரத்தான தால் கொட்டும்மழையில் 600 கிமீ காரில் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு பிரான்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடை பெறும் போக்குவரத்து தொடர்பான சர்வதேச மாநாட்டில்

கலந்துகொள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாரீஸ் சென்றுள்ளார். அங்கிருந்து மாநாட்டிற்கு செல்வதற்கான விமானடிக்கெட் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது குறித்து வெங்கய்யா நாயுடு தனது டுவிட்டரில் கூறுகையில், ஏர்பிரான்ஸ் நிறுவனம் மிகவும் பொறுப்பற்ற முறையில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது.

இதனால் கொட்டும் மழையில் 600 கிமீ தொலைவுக்கு காரில் பயணம்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவுமுழுவதும் காரில் பயணம்செய்து மாநாடு நடைபெறும் போர்டெக்ஸ் சென்றேன் . அக்டோபர் 5ம் தேதி தொடங்கி 9ம்தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து பிரான்ஸ் நாட்டு போக்கு வரத்து துறை அமைச்சர் அலெய்ன் விதாலெஸ் தனது டுவிட்டரில் கூறுகையில், வெங்கய்யா நாயுடுவுக்கு ஏற்பட்ட அசௌகரிய த்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தவிவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

பிரான்ஸ் சென்ற மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் விமான டிக்கெட் திடீரென ரத்துசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...