கேரளாவில் வலுப்பெறும் பாஜக

 கேரளாவில் பாஜக துணையுடன் ஈழவா சமூகத்தின் வெள்ளாப் பள்ளி நடேசன் ஆரம்பிக்கும் கட்சியை ஆதரிக்க தயார் என்று கேரள நம்பூதிரி பிராமணர்கள் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது.

கேரளாவில் 25% உள்ள பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவராக இருப்பவர் வெள்ளாப்பள்ளி நடேசன். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ். இயக்கத் தலைவர்களையும் அவர் சந்தித்துபேசினார்.

இதனை தொடர்ந்து தாம் ஒருபுதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் உள்ளாட்சி தேர்தலில் அது பாஜக.வுடன் இணைந்து 3வது அணியாக தேர்தலை சந்திக்கும் எனவும் அறிவித்தார். கேரளா அரசியலில் இதுபெரும் புயலை கிளப்பியது. குறிப்பாக இடதுசாரி கட்சிகளை இது அலற வைத்தது. ஈழவா சமூகத்தில் பெரும்பகுதியானோர் இடதுசாரி ஆதரவாளர்கள். ஆகையால் இது இடதுசாரிகளுக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் வெள்ளாப்பள்ளி நடேசனுக்கு எதிரான பிரச்சாரத்தில் இடதுசாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளாப் பள்ளி நடேசனின் புதியகட்சியை ஆதரிக்க போவதாக கேரளா நம்பூதிரி பிராமணர்களின் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈழவா சமூகத்தினரை கடுமையாக ஒதுக்கி வைத்த நம்பூதி பிராமணர்கள் போன்ற முற்படுத்தப்பட்ட ஜாதியினரும் அவர்களுடன் அரசியல் ரீதியாக கைகோர்க்க தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

இதுகுறித்து நம்பூதிரி பிராமணர்கள் சங்கத்தின் தலைவரான பட்டாதிரி பாட் ஊறுகையில், கேரளாவின் இந்து அமைப்புகளின் கூட்ட மைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் நாங்களும் ஒருஅங்கமாக இருக்கிறோம். வெள்ளாப் பள்ளி நடேசனின் அரசியல்கட்சி தொடங்கும் முயற்சியை ஆதரிக்கிறோம். பல்வேறு இந்து அமைப்புகள் நவம்பர் 23-ந் தேதியன்று காசர் கோடு முதல் திருவனந்தபுரம் வரை நடத்தும் ரத யாத்திரையில் நாங்களும் பங்கேற்போம் என்றார்.

கேரளாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் வலுவாக இருக்கின்றன. இதனால் இதுவரை பாஜக.வால் இம்மாநிலத்தில் நுழையமுடியாத நிலை இருந்தது. இதனால் இந்து சமூக இயக்கங்களை ஒன்றிணைத்து அதன்மூலம் எப்படியும் கேரளாவுக்குள் நுழைந்து விடுவது என்ற பாஜக.வின் முயற்சிக்கு ஈழவா, நம்பூதி பிராமணர்கள் அமைப்புகள் கைகொடுத்திருப்பது நம்பிக்கையை விதைத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...