78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்பை வைல் பார்லேவில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (எம்.எஸ்.எம்.இ) காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய (கே.வி.ஐ.சி) அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதனையொட்டி, கேவிஐசி மும்பையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேவிஐசி தலைவர் தலைமையில்மூவண்ணக்கொடி யாத்திரையை ஏற்பாடு செய்தனர். வளாகத்தில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட 'மகாத்மா ஹால்' ஐ கேவிஐசி தலைவர் திறந்து வைத்தார். இதையொட்டி கலை நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடியேற்றும் விழாவில் உரையாற்றிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வளாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் ....