ஆந்திர மாநிலத்தின் புதிய தலை நகர் அமராவதிக்கு பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து , உத்தண்டராயுனி பாலம்பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், லட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில் பேசியதாவது:
மக்களின் தலை நகராக "அமராவதி' திகழும். புதிய நகரங்கள் அமைவதை பிரச்னையாக பார்க்காமல், நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதவேண்டும். 2001-இல் குஜராத் மாநிலத்தில் புஜ் பகுதியில் நிகழ்ந்த பூகம்பத்துக்கு பின் மீள்கட்டமைப்பு செய்யப்பட்ட கட்ச்மாவட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும். அந்த நிகழ்வுகளை படிப்பினையாக கொண்டே 100 நவீன நகரங்கள் திட்டத்தை நாடுமுழுவதும் தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்கும் நடவடிக்கையை மத்தியில் முன்பு ஆட்சியிலிருந்த அரசு (காங்கிரஸ் கூட்டணி அரசு) அரசியல் சுய லாபத்துக்காக அவசர கோலத்தில் மேற்கொண்டது. மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் இருதரப்பிலும் ஆறாத வலிகளை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் இளைஞர்களிடம் அவ நம்பிக்கையை விதைத்து இருதரப்பும் மோதலில் ஈடுபட முந்தைய காங்கிரஸ் அரசு தூண்டியது. ஆந்திரமோ, தெலங்கானாவோ, இருமாநிலத்துக்கும் பொதுவான ஆன்மாவாக இருப்பது "தெலுங்கு' மொழி. அதை இருதரப்பும் உணர வேண்டும்.
அண்மையில் நாடுமுழுவதும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், மாநிலத்தைக் கட்டியெழுப்ப மத்திய அரசு அளித்த அனைத்து உறுதி மொழிகளும் நிறைவேற்றப்படும்' என்றார் நரேந்திர மோடி.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.