மக்களுக்கு தாயத்து தேவையில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும் தான் தேவை

 சந்தர்ப்பவாத கூட்டணியினர், இடஒதுக்கீடு விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். தலித்கள், மகா தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகியோரிடம் இருந்து 5 சதவீத இடஒதுக்கீட்டை பறித்து, ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நான் மிகவும¢ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன். அதனால் அந்தவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தசதியை நான் அனுமதிக்க மாட்டேன். தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பேன்.

ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ.வும். ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளரும் லஞ்சம்வாங்கும் காட்சி, வீடியோ படமாக வெளிவந்துள்ளது. ஆனால், ஊழலுக்கு எதிராகபேசும் அக்கட்சி தலைவர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, பணத்தை எடுப்பது ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்கு ஓட்டுபோட்டால், பீகாரையே விற்று விடுவார்கள். மீண்டும் காட்டாட்சி திரும்பும்.

இது, மாற்றத்துக்கான திருவிழா. ஓட்டு எண்ணிக்கை அன்று, 25 ஆண்டு கால மோசமான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி விழும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பா.ஜ.க கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்பதால், மகாகூட்டணி தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். என்னை களங்கப் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மந்திர வாதிகளை நாடுகிறார்கள். உங்களுக்கு மந்திர, தந்திரம் வேண்டுமா? ஜனநாயகம் வேண்டுமா? இந்த 18ம் நூற்றாண்டு சிந்தனை, பீகாருக்கு பயன்தராது. மக்களுக்கு தாயத்து தேவை யில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும்தான் தேவை.

பா.ஜ.க வை ஆட்சியில் அமர்த்தினால், பீகாரை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வோம். மத்திய அரசுக்கு எதிராக சொல்வதற்கு ஒன்றும் இல்லாததால், எதிரிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள்.

லாலுவும், நிதிஷ்குமாரும் தங்களது 25 ஆண்டுகால ஆட்சியில் செய்தவற்றை பற்றி கூறமுடியுமா? அப்படி எதுவும் கூற முடியாவிட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?

பீகாருக்கு எதுவுமே செய்யாத காங்கிரஸ் தற்போது பாஜக மீது குற்றம் சாட்டுகிறது .   பீகார் மக்களுக்கு இன்னும் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை அனைத்து  வளங்கள் இருந்தும் இதுவரை பீகார் வளர்ச்சி அடையாதது ஏன்?. 2வது பசுமை புரட்சி பீகாரிலிருந்து தொடங்க வேண்டும்.

பீகார் சட்ட சபை தேர்தலையொட்டி, பக்சார் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல்பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு  பேசியது:-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...