உலகளவில் பலம்வாய்ந்த 10 நபர்கள் தொடர்பாக ஃபொர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி 9வது இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஃபொர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் உலகளவில் சக்திவாய்ந்த பத்து நபர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு அந்தபத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலாமேர்கெல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மூன்றாவது இடத்தையும் . இந்திய பிரதமர் நரேந்திர மோடி 9வது இடத்தையும் பிடித்துள்ளனர் .
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 15வது இடத்தில் இருந்த பிரதமர் மோடி 6 இடங்கள் முன்னேற்றம் அடைந்து முதல்முறையாக 10 இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பத்து இடங்களை பிடித்த வர்களின் பெயர் வருமாறு,
1.விளா டிமீர் புடின்- அதிபர், ரஷ்யா
2.ஏஞ்சலா மேர்கெல் சான் சலர், ஜேர்மனி
3.பாராக் ஒபாமா – அதிபர், அமெரிக்கா
4.போப்பிரான்சிஸ்- போப், ரோமன் கத்தோலிக்க திருச்சபை
5.ஷிஜின்பிங் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்
6.பில்கேட்ஸ் – பில் & மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் தலைவர்
7. ஜெனட் யெல்லென் – ஃப்டரல் வங்கியின் சேர்மென்
8.டேவிட் கமெரூன் -பிரித்தானிய பிரதமர்
9.நரேந்திரமோடி – இந்திய பிரதமர்
10.லாரிபேஜ்- கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.