கனமழையால் பாதிக்கப் பட்ட தமிழகத்திற்கு பாஜக சார்பில் நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்கபடும் என தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
தமிழகத்தையே புரட்டிப்போட்ட வடகிழக்கு பருவமழைக்கு கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் மிகஅதிகமாக பாதிக்கப்பட்டன. வரலாறுகாணாத அளவில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு சென்னை பெருநகரமே வெள்ளத்தால் மிதக்கிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களின் ஏரிகள் நிரம்ப அதன் உபரிநீர் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளில் திறந்து விட சென்னையில் திரும்பிய திசை யெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையை சுற்றியுள்ள பலஏரிகள் நிறைந்து உபரிநீர் வெளியேறியதால், சென்னையிலும், சுற்றியுள்ள புற நகர் பகுதிகளிலும் பல குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில், வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு பாஜக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என தேசிய தலைவர் அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு பாஜக சார்பில் உடனடி நிவாரணமாக ரூ 1 கோடி வழங்கப்படும் என்றார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.