தனி நாடுகோரும் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், ஒரு தேச விரோத கட்சி என்று அகாலிதளம் குற்றம் சாட்டியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் ‘சர்பாத்–இ–ஹால்சா’ என்ற சீக்கிய அமைப்பின் சார்பில் கடந்த 10–ந் தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் சீக்கியர்களுக்காக காலிஸ் தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஆளும் சிரோ மணி அகாலி தளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் பஞ்சாப் மாநில துணை முதல்மந்திரி சுக்பீர் சிங் பாதல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஐஎஸ்ஐ. மற்றும் பாகிஸ் தானுடன் தொடர்புடைய அமைப்பின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் அக் கட்சியின் உண்மையான முகம் வெளிப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பஞ்சாபில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தனி நாடு கோரும் அமைப்பு கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தனிநாடு கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஆதரிக்கிறதா?. இல்லை யென்றால் அந்தகூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பஞ்சாபில் கடந்த 1980ம் ஆண்டு நடைபெற்ற கருப்புநாட்களை மீண்டும் கொண்டு வர ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அரசியல் காரணங் களுக்காக தீவிரவாத அமைப்பை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காங்கிரஸ் ஒரு தேசவிரோத கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.