ஆத்திரமூட்டும் பேச்சுகளை தவிர்க்கும் படி கட்சி எம்பி.,க்களுக்கு பாஜக தலைவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சியின் தலைவர்களும் சில அமைச்சர்களும் ஏதாவது சர்ச்சை கருத்துகளை பேசுவதால் அதை கையில்எடுத்து அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பேசுகின்றன. மேலும் சகிப் பின்மை இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பிவருகின்றன. இதற்கு விளக்கம் அளித்துப் பேசுவது பெரிய சுமையாகிறது .
பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் நல்ல திட்டங்களின் முக்கியத்துவத்தை குலைக்கும் வகையில் பாஜக.,வினர் பேசும் சர்ச்சை பேச்சுகளை பெரிதாக்கி பாஜக எதிர்ப்பு சக்திகள் ஊதிவிடுகின்றன. இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எம்பிக்களுக்கு அவர் வேண்டு கோள் விடுத்தார்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு நாடாளுமன்ற விவகார இணைஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:
பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி உட்பட பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கட்சிகொள்கைகளை மக்கள் மத்தியில் விரிவாக பரப்ப நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
நாட்டின் முன்னேற்றம் நல்லவழியில் செல்வதாக குறிப்பிட்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அதற்கு அடையாளமாக கடந்த காலாண்டில் வளர்ச்சிவிகிதம் 7.4 சதவீதத்தை தொட்டதை சுட்டி காட்டினார். கண்ணியத்தை கடைபிடித்து பாஜக பேசுவது அவசியம் என அறிவுரை வழங்கப்பட்டது.
சர்ச்சைக்கு இடம் தரக் கூடாது என்று அறிவுரை வழங்கபட்டது. நாட்டு மக்களை குழப்புவோரின் முகத்திரையை கிழிப்பதற்காகவே சகிப்பின்மை பற்றிய விவாதம் நடத்தப்படுகிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி அரசுதான் வகுப்புக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.எங்கும் இப்போது சமூகநல்லிணக்கம் நிலவுவது பற்றி கட்சி எம்பிக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் மோடி நடத்திய பேச்சு பற்றி யும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.