பிரதமர் மோடி மீதான முதலமைச்சர் கெஜ்ரி வாலின் விமர்சனத்திற்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் கூறியுள்ள குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, ஆதாரமற்ற புகார்களை கெஜ்ரிவால் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வில்லை என்று விளக்கமளித்தார்.
சிபிஐ அதிகாரிகள் சட்டத்திற்குட் பட்டே செயல்படுவதாகவும், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு மிகவும் மோசமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யா, ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் கேஜரிவால் கரைபடிந்துள்ள தமது கட்சி எம்.எல்.ஏ.க்களையும், அதிகாரிகளையும் பாதுகாக்க போராடி வருகிறார். இதனால் அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த 'யூ-டர்ன்' (தனது கருத்தை மாற்றி கொள்ளுதல்) விருது வழங்கலாம் என்றார்.
தில்லி முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மீது கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே சிபிஐ அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதற்கு ஏன் கேஜரிவால் குழப்பமடைகிறார்.
அவரது செயல்பாடுகளும், பேச்சுகளும் அவர் குழம்பிய நிலையில் இருப்பதையே காட்டுகிறது என்றார்.
அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்ற அமைச்சர் ஜித்தேந்திர சிங், அவை வெட்கக்கேடானது என்றார்.
சிபிஐ என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆம் ஆத்மி கட்சியினர் கவலைப்படவேண்டாம். சிபிஐ தனது கடமையை தொடர்ந்து செய்யும் என்றார்.
ராஜேந்திரகுமார் மீது ஆம் ஆத்மி உறுப்பினரே புகார் அளித்துள்ள நிலையில், தற்போது அக்கட்சியினர் என்ன செய்ய போகின்றனர் என்றார் நாயுடு.
அரசியல் சாசனத்தில் மிகமுக்கிய பதவியில் இருக்கும் கெஜ்ரிவால் மோடியை கோழை என கூறியது மிகவும் கண்டிக்கதக்கது என கூறிய ரவி சங்கர்பிரசாத்,இதற்காக கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.