பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– தமிழக பாஜக. வருகிற 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பலம்வாய்ந்த கட்சிகளுடன் இணைந்து தேர்தலைசந்திக்கும். மத்திய பா.ஜ.க அரசு மக்களுக்கான பல நல்லதிட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது.
டெல்லியில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனைபெற்ற இளம் குற்றவாளியை விடுவித்தது சட்டப்படி சரியானதுதான் என்றாலும், ஒருபெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவதை ஏற்கமுடியாது. பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இளம்வயதினர் என்றாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
நமது புனிதநூலான பகவத் கீதையில் துணிச்சல், உதவும் மனப் பான்மை போன்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளும் உள்ளன. பகவத்கீதையை படிப்பவர்களால் எந்த பிரச்சினையையும் எளிதில் எதிர் கொள்ள முடியும். எனவே குழந்தைகளுக்கு இந்துமதம் குறித்தும், பகவத்கீதை போன்ற புனித நூல்கள் குறித்தும் கற்பிக்கவேண்டும். அதை செய்யமறந்து விட்டதால்தான் இன்றைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரமே சிறந்தது என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டனர் இவ்வாறு அவர் பேசினார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.