இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவிவகித்த அடல் பிஹாரி வாஜ்பாய், தனது 91-வது பிறந்த நாளை இன்று எளிமை யாக கொண்டாடினார்.
25-12-1924 அன்று குவாலியரில் பிறந்த வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியைஎதிர்த்து, இந்திய விடுதலை போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்றுமுதல் தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கபட்டு எம்.பி. ஆனார்.
அவரது பேச்சாற்றலை கண்டு வியப் படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒருநாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடிநிலை சட்டம் (மிசா) பிரகடணப் படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து போராடி, கைதாகி சிறை சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர்.
பின்னர், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியஅரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய்விட்டது.
திருமணமே செய்துகொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்கமுடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலகநேர்ந்தது.
பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றிய தையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜன நாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவிவகிக்க முடிந்தது.
அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கபட்டு 1999-ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்ததேர்தலில் 303 எம்பி.க்.களுடன் பாஜக. அபார வெற்றிபெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.
இம்முறை 5 ஆண்டு காலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில்போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலகநாடுகளுக்கு உணர்த்தினார்.
தேர்ந்த அரசியல் வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.
2004-ம் ஆண்டு தனது 5 ஆண்டுகால பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பூரண ஓய்வில் இருக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு நாட்டிலேயே மிகவும் உயரியதான பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
மரபுகளை எல்லாம் கடந்தவகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச் சென்று சிறப்புக்குரிய இந்தவிருதினை அவருக்கு வழங்கினார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள இல்லத்தில் இன்று தனது 91-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்றிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்தவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் வாஜ்பாய்க்கு வாழ்த்துதெரிவித்துள்ளார்.
“அன்புக் குரிய வாஜ்பாய்ஜி-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!. பாராளுமன்ற உறுப்பினராகவும், மந்திரியாகவும், பிரதமராகவும் அனைத்து பொறுப் புகளிலும் தனது பங்களிப்பை மிகவும் திறம்பட நிறைவுச்செய்தது வாஜ்பாய்-ஜியின் தனிச் சிறப்பாகும். மிக இக்கட்டான காலகட்டத்தில் தனித்தன்மையுடன் இந்தியாவுக்கு தலைமை தாங்கிய இந்த உயர்ந்தமனிதருக்கு தலை வணங்குகிறோம். இன்று மாலை டெல்லிவந்து இறங்கியதும், அவரது வீட்டுக்குசென்று நேரில் வாழ்த்துதெரிவிப்பேன்” என தனது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.