தமிழக – கேரள எல்லையான காரோடு முதல் வில்லுக் குறி வரை 4 வழிச் சாலை அமைக்க ரூ.1,274.34 கோடியும், வில்லுக்குறி முதல் கன்னியா குமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரையிலும் 4 வழிச் சாலை அமைக்க ரூ.1,041.98 கோடியும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.286.95 கோடியும் ஒதுக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டம் வகுத்தது.
இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மார்த்தாண்டம் பஸ்நிலையம் அருகில் ஜோஸ்கோ மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட தமிழகத்தை சேர்ந்த பல எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
அடிக்கல் நாட்டு விழாவை யொட்டி மார்த் தாண்டத்தில் மேடையும், பந்தலும் அமைக்கும்பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதவாது:–
குமரிமாவட்டம் மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றால் சிறு மற்றும் பெரியகடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என புரளியை கிளப்பிவருகிறார்கள்.
மேம்பாலம் அமைப்பது போக்குவரத்து நெரிசலை குறைப் பதற்காக மட்டும் தான். வியாபாரம் ஒருவருக்கு கூடுவதற்காகவோ, குறைவதற்காகவோ தேசியநெடுஞ்சாலை ஆணையத்தில் திட்டங்கள் எதுவும் கிடையாது.
மார்த்தாண்டத்தில் உள்ள தற்போதைய சாலையில் வியாபாரிகள் விரும்புவது போல் 4 வழிச் சாலை அமைக்க வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்சம் ஒருபக்கத்துக்கு 90 அடி வீதம் இருபக்கமும் இடம் எடுக்கபடும். அப்படியானால் தற்போது இருக்ககூடிய கடைகளில் 80 சதவீதகடைகள் இடிபட்டு போகும். இது புரியாமலேயே சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
மேம்பாலம் அமையும்போது கடைகள் பாதிக்காத வகையில் சர்வீஸ்சாலைகள் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல எந்த கட்டணமும் செலுத்த வேண்டியது இருக்காது. மேலும் இந்த பாலங்கள் 24 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.