தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு சில மாநிலங்களைத்தவிர அனைத்து இடங்களிலும் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வருகிற 24–ம் தேதி அவர் மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்ற நிலை ஏற்படும் அளவுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு முன்பைவிட கூடுதலாக 71 சதவீதம் மின்சாரம் பகிர்மானம் செய்யப்படுகிறது.
மத்திய பா.ஜ.க. அரசின் அனைத்து துறைகளும் தமிழகத்திற்கு உதவியாக இருந்துவருகின்றன. தமிழகத்தில் பெரும்வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய அரசு அளித்த உதவியால் மிகவிரைவிலேயே மீண்டு எழ முடிந்தது.
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே பேரவையின் இறுதி கூட்டத்தொடரான இந்த கூட்டத்திலேயே மது விலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கவேண்டும்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்காக 2 மத்திய அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜக. முழு வீச்சில் பணியை தொடங்கி யுள்ளது. இத்தேர்தலில் மக்களுக்கு பயன் தரும் கூட்டணி அமைக்கப்படும்.
வருகிற 25–ந் தேதி முதல் அடுத்தமாதம் (பிப்ரவரி) 5–ம் தேதிக்குள் 234 பேரவைத்தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கட்சிசார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்பமனு பெறும் தேதி சிலதினங்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.