பாஜக ஆட்சி எவ்வாறு உள்ளது, பிரதமர் மோடியின் செயல் திறன் எப்படி, இன்று தேர்தல் நடந்தால் பாரதீய ஜனதாவின் நிலை என்ன என்பதுகுறித்து எபிபி செய்தி நிறுவனமும், நீல்சன் நிறுவனமும் இணைந்து புதியசர்வே எடுத்துள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளாதாவது:-
ஒன்றரை வருட பாரதீய ஜனதா ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு திறன் குறித்தகேள்விக்கு 54 சதவீதத்திற்கும் மேற்படவர்கள் செயல்திறன் சராசரிக்கும் அதிகம் தான் என்று கூறியுள்ளனர்.
இந்தகேள்விக்கு பதில் அளித்தவர்களில் 17 சதவீதம் பேர் மிகவும் நன்றாகஇருந்தது என்றும்,37 சதவீதம் பேர் நன்றாக இருந்தது என்றும் 30 சதவீதம்பேர் சராசரியாக இருந்தது என்றும், 11 சதவீதம்பேர் மோசம் என்றும் கூறியுள்ளனர்.
பதில் அளித்தவர்களில் பெரும்பான்மையினர் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல் பாடுகள் சராசரிக்கும் அதிகம் இருந்ததாக கூறி உள்ளனர். இந்தசர்வேயின் மூலம் பாராளுமன்ற தேர்தல் இன்று நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இன்று தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 301 இடங்கள்கிடைக்கும் என்று சர்வே மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) கடந்தமுறையை விட இந்தமுறை 62 முதல் 100 இடங்கள் அதிகம்பெறும் என தெரிய வந்துள்ளது. இதுபோல் இடதுசாரிகளின் இடங்களும் இரட்டிப்பாகும்.ஆனால் மற்றய கட்சிகளின் இடங்கள் வெகுவாக குறையும் என தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் இன்று நடந்தால் பா.,ஜனதா 43 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் 14 சதவீத ஓட்டுகளும், ஆம் ஆத்மி 4 சதவீத ஓட்டுகளும், திரிணாமுல் காங்கிரஸ் 3 சதவீத ஓட்டுகளும், ஜனதா தளம் ஒரு சதவீத ஓட்டும் பெறும் என தெரிய வந்துள்ளது.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.