வாருங்கள், தோளோடு தோள் சேர்ந்து நடைபோடுவோம். நாட்டுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்

பாராளுமன்றம் விவாதம் நடத்துவ தற்கான பேரவை!, அரசை கேள்வி கேட்பதற்கான பேரவை!!, அரசு தன்னை பாதுகாக்கும் வகையில் தனது கருத்தினை எடுத்து வைப்பதற்கான பேரவை!!!. அதன் கண்ணியமும், புனிதத்துவமும் காக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்தசபை இயங்குவதற்கு இங்கே அனுமதி இல்லை. அது அரசின் மீதான கோபத்தினால் அல்ல. தாழ்வு மனப்பான்மை யினால்தான்.

எதிர்க்கட்சி வரிசைகளில் திறமைவாய்ந்த, நம்பிக்கையூட்டக் கூடிய புதுமுகங்கள் பலர் உள்ளனர். சபை நடவடிக்கையை முடக்குகிறவர்கள், இவர்களின் திறமை வெளிப் படுவதை தடுப்பதற்குத்தான் அப்படி செய்கிறார்கள்.

புதிய உறுப்பினர்கள் தங்கள் திறமையை நிரூபித்துவிட்டால், தங்கள் எதிர் காலம் என்ன ஆகுமோ, தங்கள் கதி என்ன ஆகுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

60 ஆண்டுகளாக நம்மால் செய்ய முடியாததை, இவர் எப்படி சிறப்பாகச் செய்கிறார்? என்ற ஆற்றாமையும், வருத்தமும் அவர்களுக்கு உள்ளது.

உறுப்பினர்கள் அனைவரும் நமது ஜனாதிபதியின் அறிவுரையை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை முடக்குவதின் விளைவு என்ன ஆகும் என்பதை அவர்கள் சுயபரி சோதனை செய்து பார்க்கவேண்டும்.

சபையில் விவாதங்கள் நடக்கலாம். விவாதங்களின் போது ஒரு எல்லைக் கோட்டை பராமரித்தால் அது பலன் தரக்கூடியதாக அமையும். இது என்னிடம் இருந்து வருகிறவார்த்தைகள் அல்ல. இதை சொன்னவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான்.

சபை நடவடிக்கைகளை முடக்குவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். மக்களுக்காகத் தான் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இடைத் தரகர்களிடம் இருந்து அதிகார வர்க்கம் விடுபடுவதை உறுதி செய்வதற்காகத் தான் அவை நிறைவேற்றப்படுகின்றன. இதை நான் கூறவில்லை. நமது முன்னாள் சபா நாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருக்கிறார்.

நாம் அனைவரும் வரலாற்றுக்கு சாட்சிகளாக மட்டும் இல்லை. வரலாற்றை உருவாக்குவதிலும் நாம் சில நேரங்களில் அங்கமாகிறோம். இதைசொன்னவர் நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.

நாட்டின் முன்னேற்றத்தை சிலநேரங்களில் உயர்ந்த கட்டிடங்களுக்குள் வாழ்கிற படித்தவர்கள் எதிர்க் கிறார்கள். இதை நான் கூறவில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சொல்லி இருக்கிறார்.

பாராளுமன்றம் முடங்குகிறபோது, இந்தநாடு தான் பாதிப்புக்கு ஆளாகிறது. பிரச்சினைகளை விவாதிக்க முடியாத எம்.பி.க்கலோ,இந்த அரசோ அல்ல.


வறுமை, காங்கிரசின் மரபுவழி சொத்தாக இருக்கிறது. அதை வேரோடு வீழ்த்த கடுமையாக உழைக்கவேண்டி இருக்கிறது.

நீங்கள் உரிமை கோருவதெல்லாம் உங்களுக்கு உரியது தான். ஜிஎஸ்டி. மசோதா உங்களுக்கு உரியது தான். ஏன் அதை நீங்கள் தடுத்து நிறுத்துகிறீர்கள்?

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை நீங்கள்தான் கொண்டு வந்து அறிமுகம் செய்தீர்கள். எதற்காக? உங்களுடைய 60 ஆண்டுகால ஆட்சியில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. எனவேதான் இந்த திட்டத்தை கொண்டுவந்து, ஏழை மக்களை பள்ளம்தோண்ட வைத்திருக்கிறீர்கள். இந்த திட்டத்தின் பலன், யாரை இலக்காக கொண்டிருக்கிறதோ அவர்களை சென்றடையவும், நிலையான சொத்துகளை உருவாக்கவும் ஏற்றவகையில், இந்த திட்டத்தின் கட்டமைப்பை மாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

இந்த திட்டத்தில் ஊழல் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். ஆமாம், அதனை 100 சதவீதம் உண்மை என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது காங்கிரஸ் ஆட்சியில்தானே தவிர தற்போது அல்ல.

2012–ம் ஆண்டின் கணக்கு தணிக்கையர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை பாருங்கள். நீங்கள் உணவுபாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஆனால் நீங்கள் ஆட்சிசெய்த மாநிலங்களே (அருணாசலபிரதேசம், கேரளா, மிசோரம், மணிப்பூர்) அதை அமல்படுத்த முடியாத துயரம் ஏற்பட்டது.

‘மேக் இன் இந்தியா’ திட்டம் கேலிசெய்யப்படுகிறது. இதில் குறைபாடுகள் இருந்தால், எங்களிடம் யோசனைகள் தரலாம். அதை விட்டுவிட்டு நாம் கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்திக்கொண்டு நிற்பதாக உலகுக்கு எதற்காக காட்டவேண்டும்? நாம் நம்மை பலவீனமானவர்களாக காட்டக் கூடாது. இதை நான் சொல்ல வில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் கூறி இருக்கிறார்.

நான் எனது வாழ்நாளெல்லாம் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டு வந்திருக்கிறேன். நான் அவற்றுடன் வாழ கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அதிகார வர்க்கத்தின் பொறுப்புணர்வை உயர்த்துவது பற்றி சிந்திக்க வேண்டும். அதிகார வர்க்கத்தினரை பொறுப்பு ஏற்கவைக்க வேண்டும். பிரதமருக்கு யாரும் கீழானவர்கள் அல்ல.

பொறுப்பை ஏற்கும்நிலை அதிகரிக்கப்பட வேண்டும். நான் மட்டுமே இதை செய்துவிட முடியாது. நீங்கள் அனுபவம் மிக்கவர்கள். உங்கள் ஆதரவு எனக்குதேவை. வாருங்கள், தோளோடு தோள்xசேர்ந்து நடை போடுவோம். நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டும்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...