பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என பாஜக., எம்.பி.க்களுக்கு தேசிய தலைவர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
டில்லியில் நேற்று(09-03-16) நடந்த பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ., தேசியத் தலைவர் அமித்ஷா பேசியதாவது : எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் மத்திய பட்ஜெட் பாராட்டப் பட்டுள்ளது. பட்ஜெட்டின் பலன்கள் கீழ்த்தட்டு மக்கள் உட்பட அனைவரையும் சென்றடைவதை அமைச்சர்கள் உறுதிப் படுத்த வேண்டும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடை பெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல்களை கருத்தில்கொண்டு,பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.
கூட்டத்திற்கு பின் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம், முத்ரா வங்கிக்கடன் திட்டம், ஜன்தன் திட்டம், கிராமப்புறங்களில் 100 சதவீத மின் இணைப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க எம்.பி.,க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நடப்பு பார்லி., கூட்டத் தொடரில் இஷ்ராத் ஜஹான் என்கவுன்ட்டர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தவேண்டும் என சில எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அதுகுறித்து லோக்சபாவில் விவாதம் நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.