பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
மாநில முதல்–மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது. இந்தமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
நமது நாடு மிகப் பெரியது. இங்கு ஒரே நேரத்தில் பலதேர்தல்கள் நடக்கிறது. இதனால் எங்காவது அடிக்கடி தேர்தல் நடத்தை விதிகள் இருந்துகொண்டே இருக்கிறது. இது அரசின் வளர்ச்சி திட்டங்கள் மக்களை சென்றடைவதை பாதிக்கிறது.
எனவே இந்தபிரச்சினையில் இருந்து விடுபட பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதற்கான ஒருவழியை நாம் கண்டிப்பாக கண்டுபிடிக்க வேண்டும்.
நீதித்துறையில் நிறையசட்டங்கள் இருக்கின்றன. இதுமிகுந்த சுமையாக உள்ளது. இதன் எண்ணிக்கையை குறைப்பது மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர், குறைந்தது 1500 சட்டங்களாவது காலா வதியாகி இருப்பதாக கண்டுபிடித் துள்ளனர்.
இந்த சட்டங்கள் விரைவில் அகற்றப்படும் என நம்புகிறேன். சிலசட்டங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டன. இதில் அரசும், நீதித்துறையும் இணைந்து வெற்றிகாண்பார்கள் என உறுதி கூறுகிறேன். இதில் நாம் வெற்றி பெறுவோமோ இல்லையோ அதுவேறு விஷயம். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் எங்களுடன் ஒத்துழைத்தால், நாம் அதற்கான வழிகளைகாணலாம்.
சிலநாட்களுக்கு முன் இது போன்ற ஒரு மாநாட்டில் நான் பேசும் போது, கோர்ட்டுகளின் பணி நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் அதிகமாக உழைக்கவேண்டும் எனவும் யோசனை கூறினேன்.
அந்தமாநாடு முடிந்ததும் நீதிபதிகள் எல்லோரும் என் மீது ஆத்திரம் கொண்டனர். நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கோபமடைந்தனர். இதனால் பயந்துபோன நான், அதன் பிறகு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. (இதை கேட்டதும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதிகள் மற்றும் அரங்கில் இருந்தவர்கள் பலமாக சிரித்தனர்).
சாதாரண மனிதர்கள் நீதித்துறைமீது இன்னும் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்தநம்பிக்கையை நாம் தொடர்ந்து காப்பாற்றவேண்டும். சரியான நேரத்தில் நீதி வழங்குவதில் அரசுக்கான கடமைகள் நிறைவேற்றப்படும்..
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.