உ.பி,யில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை விவசாயிகளுக்கு பயன் தராது என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .
உ.பி.,யில் விவசாயிகளுக்கு-ஆதரவாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக டில்லியில் பேட்டியளித்த பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன்,
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ராகுல் காந்தி உள்ளார். அவர் கட்சியை-வளர்க்கும் நடவடிகைகளில் ஈடுபட அவருக்கு முழுஉரிமை உண்டு. அதற்கு நாங்கள் எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இந்த பாதயாத்திரை ராகுலின் உடல் நலத்திற்கும் அவரது கட்சிக்கும்-நல்லது.
ராகுலின் பாதயாத்திரையினால் விவசாயிகளுக்கோ , நாட்டிற்கோ எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. கடந்த சிலநாட்களுக்கு முன்னர் கலாவதி என்கிற பெண்ணின் வீட்டிற்க்கு ராகுல் சென்றார். ஆனால் அந்த பெண்ணுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.
ராகுலின்-பாதயாத்திரையை மகாத்மா காந்தியின் தண்டியாத்திரையோடு ஒப்பிடுவது நல்லதல்ல. உ.பி.,யில் காங்கிரஸ்-கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணி கட்சிகள் போன்று செயல்படுகின்றன. அங்கு அந்த-கட்சிகள் மேட்ச்பிக்சிங்கில் ஈடுபடுவது போன்று ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ்க்கு மத்தியில் ஆதரவு தேவை படும்போதெல்லாம் பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவளிதுள்ளது.
காங்கிரசின் கூட்டணிக் கட்சி ஆட்சிசெய்யும் மாநிலத்தில் ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நொய்டா நிலவிவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்க்கதக்கது. விவசாயிகளுக்கு நீதி-கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா செயல்படும். விவசாயிகளை-எப்போதும் ஆதரிப்போம். விவசாயிகள் தங்களது உரிமைகளை பெறவேண்டும் என்று தெரிவித்தார் .
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.