சரியாக வேலைபார்க்காத, திறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக்கமுடியாது. அவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும். இந்தத்திட்டம் மத்திய அரசின் அனைத்து துறைகளில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்தியில் மோடி அரசு பதவிக்குவந்தது முதலே மத்திய அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் , ஏன் மத்திய அமைச்சர்களுக்குமே கிடுக்கிப்பிடி போட்டுவருகிறது மத்திய அரசு. இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு என்ற சாட்டையை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
அந்த வகையில் தற்போது குறைந்த செயல்திறன் கொண்ட அதிகாரிகள் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பணியை இழக்கநேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதன் முதல் கட்டமாக மத்திய அரசின் வருவாய்த்துறையைச் சேர்ந்த 7 குரூப் ஏ பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் உள்பட 33 அதிகாரிகளுக்கு மத்திய அரசு, செயல் திறமையின்மையை காரணம்காட்டி கட்டாய ஓய்வை கொடுத்துள்ளது.
வருவாய்த் துறை என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும் இந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் பல்வேறு துறைகளைச்சேர்ந்த 72 அதிகாரிகள் மீது ஒழுங்கீனம் தொடர்பான விசாரணையை நடத்தி அவர்களை டிஸ்மிஸ்ஸும் செய்துள்ளது .
இதேபோல், அனைத்து துறைகளிலும் அதிகாரிகளின் செயல் பாடுகள் கண்காணிக்கப் படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அவர்கள் சுதாரித்து கொண்டு சரிவர செயல்படா விட்டால் கட்டாயம் நடவடிக்கைக்குள்ளாக நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும், பணியில் அலட்சியமாக இருப்பது, அசமந்தமாக வேலைசெய்வது, கவனமின்மை, திறமையின்மை போன்றவை ஏற்றுக் கொள்ளப் படாது என்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசு நிர்வாக சீர்மைக்கவும், சரியில்லாத அதிகாரிகளை நீக்கும்வகையிலும், ஊழியர்களிடையே திறமையை கூட்டும் வகையிலும் இந்த நடவடிக்கையை எடுக்க ஆரம்பித் துள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. மாதந்தோறும் அதிகாரிகளின் செயல்பாடு குறித்த அறிக்கையை மத்திய அரசு கேட்டுப்பெறுகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.