வரும் உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் பா.ஜ.க.வுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட கடந்த 2011 தேர்தலைவிட 5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம்.
தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைவிட பாஜக அதிகவாக்குகளை பெற்றுள்ளது. கூடாநட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க முதுகில் சவாரிசெய்த காங்கிரஸ் தான் கெட்டதோடு தி.மு.கவின் வெற்றியையும் பறித்து விட்டது. திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காங்கிரஸே காரணம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு இளங்கோவனின் பதில் என்ன? காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினைகளை தீர்க்கமுடியாத இளங்கோவனுக்கு பா.ஜ.க பற்றி பேச தார்மிகஉரிமை இல்லை. நான் உள்பட பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம்.
துணிச்சல் இருந்தால் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். முதல் முறையாக சென்னையில் பா.ஜ.க அதிக வாக்குகளை பெற்றுள்ளது. திராவிடகட்சிகளுக்கு மாற்று பா.ஜ.கதான் என்பதையே இந்ததேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்துதான் போட்டியிடும். அதுபோல காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா என இளங்கோவனுக்கு பகிரங்கசவால் விடுகிறேன். இதற்கு அவரின் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.