கத்தார் நாட்டுசிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் 60 லட்சத் துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அரசு முறை பயணமாக கத்தார் சென்றிருந்த பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களின் நலன்களை நல்ல முறையில் பாதுகாக்குமாறு அந்நாட்டு மன்னரான ஷேக்தமிம் பின் ஹமாத் அல்-தானியிடம் வலியுறுத்தி யிருந்தார். அதை மன்னரும் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கத்தார் நாட்டுசிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல்வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘சிறப்புக்குரிய ரமலான் மாதத்தின் துவக்கத்தை யொட்டி, கத்தார் அரசு 23 இந்தியகைதிளை விடுதலைசெய்துள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் தாய் நாடு திரும்புவார்கள்.
அவர்களை விடுதலைசெய்த கத்தார் மன்னர் ஷேக்தமிம் பின் ஹமாத் அல்-தானிக்கு எனது மன மார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.