ரகுராம் ராஜன் தேசப் பற்றுடையவர் தான் அவர் இந்தியாவை நேசிக்கிறார்

ரிசர்வ்வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியாவுக்காக எப்போதும் பணியாற் றுவார் என்று கூறிய மோடி, அவரை தேசப்பற்றி ல்லாதவர் என்று கூறுவது தவறு என்று தெரிவித்துள்ளார்.

'டைம்ஸ் நவ்' தொலைக் காட்சி சேனலில்  மோடி அளித்த பேட்டியில் கூறியது:

“என்னுடைய கட்சியோ இல்லையோ, இவ்வ கையான பேச்சுகள் சரியல்ல. புகழ்பெறு வதற்கான ஆசையினால் நாட்டுக்கு நன்மை விளையப் போவதில்லை. பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம். அமைப்பைவிட தன்னை உயர்ந்தவராக ஒருவர் கருதுவது தவறு.

கட்சி தலைவர்களுக்கு இது குறித்து நான் கூறிய போது பேச்சில் கவனமும் கட்டுப்பாடும்தேவை என்று கூறிய எனது செய்தி தெளிவானது, இதில் எனக்கு எந்த குழப்பங்களும் இல்லை.

ராஜனுடன் எனது அனுபவம் நன்றாகவே உள்ளது, அவர் செய்தபணியை நான் பாராட்டுகிறேன். ரகுராம் ராஜன் நம்மைக் காட்டிலும் தேசப்பற்றுடையவர் அல்ல என்று கூறுவது தவறு. அதேபோல் அவர் இந்தியாவின் நலன்க ளுக்காக பணியாற்ற வில்லை, மாட்டார் என்று கூறுவது நியாயமாகாது. அவர் தேசப்பற்று டையவர்தான். அவர் இந்தியாவை நேசிக்கிறார். அவர் எங்கு பணியாற் றினாலும் இந்தியாவுக்காகவே பணியாற்றுவார், அவர் தேசப்பற்றுடையவரே.

2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட அவரை நாங்கள் பதவியில்தொடர அனுமதிப்போமா என்ற ஐயங்களுடன் ஏகப்பட்ட ஊடகச்செய்திகளும் ஊகங்களும் வெளியாகின, அதாவது நாங்கள் அவரை பதவியில் தொடர அனுமதிக்கமாட்டோம் என்று கூறினர். தற்போது அது தவறென்று நிரூபிக்கப்பட்டு விட்டது".

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...