தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே உரியபாதுகாப்பு இல்லாதது மிகுந்தவேதனை அளிக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர்மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை, தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துப் பேசினார். அவருடன், புதுவைமாநில தலைவர் சாமிநாதன் உடனிருந்தார்.
இந்த சந்திப்புக்குப்பின் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுச்சேரி கவர்னர் கிரண் பெடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவருடன் பல்வேறுகருத்துக்களை பரிமாறிக் கொண்டேன். அவர், புதுச்சேரியை முன்னேற்றபாதையில் கொண்டுசெல்ல முயற்சி எடுத்து வருகிறார்.
கவர்னர் கிரண்பெடி சிறந்தநிர்வாகி. மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர். தான்வகிக்கும் பதவியால் மக்களுக்கு என்னென்ன திட்டங்களை செய்துகொடுக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுத்தி வருபவர். மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும் இருந்துவருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை, அவரே முன்வந்துசெயல்படுத்தி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் அளித்த விவரம் வருமாறு:–
கேள்வி: தமிழகத்தில் தொடர்ச்சியாக காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு பற்றி?
பதில்: தமிழகத்தில் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பு இல்லா சூழ்நிலை நிலவி வருகிறது. இதுமிகுந்த வேதனையளிக்கிறது. திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணு பிரியாவின் மர்ம சாவு வழக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப் பட்டுள்ளது. பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஒருவரும் உயிர் இறந்துள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் படுகொலைசெய்யப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சட்ட–ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்து இருந்துபார்க்கலாம்.
கேள்வி:– சரக்கு மற்றும் சேவைவரிக்கு தமிழகம் ஒப்புதல் அளிக்காதது பற்றி?
பதில்:– சரக்கு ,சேவை வரி மசோதாவுக்கு தமிழகம் மட்டுமே தனது ஒப்புதலை தராமல் உள்ளது என மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதில் ஏற்படும் இழப்பீடுகளை மத்திய அரசு சரி செய்துவிடும். எனவே அந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டியது அரசின் கடமை. இது பா.ஜனதாவின் திட்டம் இல்லை. மக்களுக்கு பலன்தரும் திட்டம். இதற்கு ஆதரவுதருவது தான் தர்மம். இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.