தமிழக அரசு பாலாறு பிரச்சினையில் முறையாக கண்காணித்து இருக்கவேண்டும். கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். அல்லது தடுத்துநிறுத்தும் முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் மெத்தனமாக இருந்துவிட்டது.
16-ந்தேதி டெல்லியில் நடைபெறும் முதல்- மந்திரிகள் கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொள்ள வேண்டும். நமது பிரச்சினைகளை எடுத்துவைக்க அது ஒரு நல்ல தளம். சுற்றியுள்ள மாநிலங்களோடு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவைகளை அந்தகூட்டத்தில் எடுத்து வைக்கலாம். நமது மாநில உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு தீவிரகவனம் செலுத்த வேண்டும்.
காவல்துறையில் தொடரும் மனித உரிமைமீறல் கவலை அளிக்கிறது. விணுப்பிரியா மரணத்தில் செல்போன் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப் பட்ட சுவாதியின் உடல் 2 மணிநேரம் கேட்பாரற்று கிடந்துள்ளது. எந்த போலீசும் செல்லவில்லை. மாநில அரசு பாதுகாப்பில் உள்ள ஐகோர்ட்டு வளாகத்தில் அரிவாள் கொண்டுபோய் வெட்டுகிறார்கள்.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் முறையாக வழக்குகளை கையாண்டு ஜாமீன்பெற்று கொடுப்பதில்லை. இதனால்தான் அதிகளவில் சிறுவர்கள் அடைபட்டு கிடக்கிறார்கள் என்று புகார் கூறப்படுகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது போலீஸ்துறையில் கவனக்குறைவு, விதிமீறல், மனித உரிமைமீறல் போன்றவை அதிகரித்து வருகிறது. இது சட்ட-ஒழுங்கை பாதுகாக்க உதவாது. அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து அந்த சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.