ஆப்கன் தலை நகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர்கால அரண்மனையை பிரதமர் நரேந்திரமோடி காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் திங்கள் கிழமை திறந்துவைத்தார்.
ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள மலை உச்சியில் ஸ்டோர்பேலஸ் என்ற அரண்மனையை ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் கடந்த 1920ஆம் ஆண்டுகளில் கட்டினார். மிகவும் சிதிலம டைந்திருந்த அந்த அரண்மனை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அந்த அரண்மனையை பிரதமர் நரேந்திரமோடி, ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து காணொலி முறையில் திங்கள்கிழமை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆப்கானிஸ்தான் நமது நெருங்கிய நட்புநாடு. நமது சமூகங்களும் மக்களும் தொன்மையான உறவுகளையும் பாரம்பரியத்தையும் கொண்டவர்கள்.
உங்கள் நாட்டுக்கு (ஆப்கன்) தொடர்ந்து அன்னியசக்திகளாலும், பயங்கரவாதக் குழுக்களாலும் சவால் விடுக்கப்படுவது எங்களை கவலையில் ஆழ்த்துகிறது. வளமான ஆப்கானிஸ்தானை உருவாக்கவும், அமைதியை, பாதுகாப்பு, நிலைத் தன்மை ஆகியவற்றை உங்கள் சமூகத்துக்கு கொண்டுவரவும் நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இந்தியாவின் 125 கோடி மக்களும் துணைநிற்பார்கள் என்று உறுதியளிக்கிறேன் என்றார் மோடி.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.