பிரதமர் நரேந்திரமோடி, வெளிநாட்டு பயணத்தின் முதல்கட்டமாக இன்று வியட்நாம் செல்கிறார். அங்கு அந்நாட்டு தலைவர்களைச் சந்தித்துப்பேசுகிறார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, சீனாவுக்கு செல்லும் அவர், ஹாங்சூ நகரில் வரும் 4 மற்றும் 5-ம் தேதி நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தமாநாட்டில் தீவிரவாத அமைப்புகள் நிதி திரட்டுவது மற்றும் வரி ஏய்ப்பைதடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டுக்கு நடுவே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப்பேசுகிறார். பின்னர் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
பின்னர் 5-ம் தேதி தாயகம்திரும்பும் அவர், 2 நாள் பயணமாக லாவோஸ் செல்கிறார். அங்கு நடைபெறும் இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா உச்சிமாநாடுகளில் பங்கேற்கிறார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.