மும்பை பங்குச் சந்தை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியவை பின்வருமாறு:-
இன்று உலகம்முழுவதும் பலநாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலசிக்கல், சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால், அவற்றில் எல்லாம் சிக்காமல் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. அது மட்டுமின்றி, மேலும் வளர்ச்சியடை வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துவருகின்றன. பல நாடுகளில் வன்முறை, தீவிரவாதம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நிறையநாடுகளில் அமைதியான சூழ்நிலை இல்லாமல் அரசியல் பிரச்சனைகளை சந்தித்துவருகின்றன.
ஆனால், இந்தியாவில் பல்வேறு வகைப்பட்டமக்கள் வாழ்ந்துவந்தாலும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி அமைதியாக உள்ளது. மற்ற நாடுகளைவிட பொருளாதாரா வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நிலையான அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை நிலவிவருவதை சாதகமாக பயன்படுத்தி இந்தியா பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.