பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் வருகிறது டிஜிட்டல்முறையில்

அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் டிஜிட்டல்முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

தேசியக் கல்வி ஆவணக்காப்பகம் தொடர்பான விழிப்பு ணர்வு மாநாடு, டில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல்முறையில் வழங்குவதற்காக, “டிஜிட்டல் இந்தியா’ பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.

முதலீட்டாளர்களின் நிதிவளங்களை பாதுகாக்கும் வகையில், நிதிசார்ந்த பத்திரங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், கல்வி சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக்காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தமுறையில், புதிய கல்வி சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்றசான்றிதழ் களையும் இணையத்தில் பதிவேற்றி கொள்ளலாம். அவர்களது விவரப்பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றி தழ்களைப் பெறுவதற்காக பல்கலைக் கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...