கண்மூடி எதிர்ப்பது சரியல்ல, கலந்தாலோசனையே சரியாகும்!

‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சாதக, பாதகங்கள் அலசப்படுகின்றன.

கல்வியாளர்கள் இல்லாத, கருத்துக்களைக் கேட்காத வகையில் கல்விக் கொள்கை திணிப்பு.   கல்விக் கொள்கை குழுவில் கல்வியாளர்கள் இல்லை. சரியான வகையில் அனைத்து  தரப்பட்ட மக்களிடமும் நிறுவனங்களிடமும் கருத்துக்கள் கேட்கப்படவில்லைஎன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் தவறு. இக்குழுவில் உலகப் பிரசித்திபெற்ற பேராசிரியர் ரஜ்புத் இடம் பெற்றுள்ளார்மிகச் சிறந்த அனுபவம் மிக்க, தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்த முன்னாள் ..எஸ். அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

ஐந்து வகுப்பிற்கு பிறகு இடைநிறுத்தம் சரியா?

ஆறாம் வகுப்பிலிருந்து, கற்றல் என்பது செய்முறைகளையும், கணினிப் படிப்பையும் உள்ளடக்கியது. ஐந்து வகுப்பிற்கு மேல், இடைநிறுத்தம் இல்லாத வகையில், தொடர்ச்சியான, முழு மதிப்பீட்டு முறையினால் (Continuous and Comprehensive Evalution System) படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குக் குறைதீர் கற்பிப்பு வழங்கப்படும் என இத்திட்டம் ஷரத்து 4.3.4 தெளிவு படுத்துகின்றது.

குலக் கல்வி" கொண்டு வரப்படுகிறதா?

முன்பெல்லாம் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்" என்ற திட்டத்தை ஆக்க பூர்வமாகச் செயல்படுத்தினார்கள். கைத்தொழிலில் ஆர்வம் காட்டும் அவ்வழியில் செல்ல வழிவகை உலகெங்கும் செய்யப்படுகின்றது. வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. தற்போது கூட கைத்தொழிலில் ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளியிலிருந்தே கம்யூனிடி காலேஜில் இணைந்து மேற்படிப்புப் படிக்கிறார்கள். இது ஆராய்ச்சிக் கல்வி வரை நீளுகின்றது. இதை உணராமல், ‘குலக் கல்வி’ என கொச்சைப்படுத்துவது சரியல்ல.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமை பறிக்கப்படுகின்றதா?

அனைவருக்கும் கல்விச்சட்டவிதி 2(n) படி, இச்சட்டம் எல்லாப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.ஏழ்மையான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் இலவசக் கல்வி 25% மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனும் விதி 12(1)(C) ல் உள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அடிப்படையில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது எனத் தெளிவுபடுத்திவிட்டதால், இந்த விதியை அமல்படுத்துவது தற்போது இயலாத ஒன்று. இதற்கு அரசியல் சாசனத் திருத்தம் தேவைப்படும்.

மாநில அரசுகளின்உரிமையை மத்திய அரசு பறிக்கிறதா?

அகில இந்திய அளவில் கிட்டத்தட்ட உயர்கல்வி அனைத்திற்கும் நுழைவுத் தேர்வு என்பது உறுதியாகி விட்ட நிலையில், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரேவிதமான பாடத்திட்டமாகவே அமையும் என்பதுசரிதான். பொருளாதாரம், வணிகம் போன்ற முக்கியப் பாடங்களுக்கும் அகில இந்திய அளவில் ஒரே பாடத்திட்டம் அமைய புதிய கல்விக் கொள்கை வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு. ஆக இந்த மாற்றம் மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பதாகாது. இந்தியாவில் சுமார் 42 கல்வித்திட்டங்கள் உள்ள நிலையில் ஒரே வித தரக் கல்வி முக்கிய பாடங்களுக்கு மட்டும் நாடு முழுவதும் இருக்கும் என்பது மிக வரவேற்கத்தக்கது. மூன்றாம் மொழி இந்தி அல்லது சமஸ்கிருதம் மட்டுமே என எங்கும் சொல்லப்படவில்லை.

தாய்மொழிக் கல்விக்கு முழுக்கு?

இது பொய்யான குற்றச்சாட்டு. ஆதாரக் கல்வி முதல், பிளஸ் டூ வரை தாய் மொழிக் கல்வி முறை தொடரும்.இரண்டாம் மொழி ஆங்கிலம்  இருக்கும். (விதி 4.11.1 மற்றும் 4.11.2) மூன்றாம் மொழியொன்றை, மாநில அரசுகள் விருப்பத்திற்கிணங்க, கற்க வழிவகை செய்யப்படுகின்றது.

சமஸ்கிருதத் திணிப்பா?

ஐ. நா. சபையால் உலகில் சீனம், பெர்ஷியன், ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் தொன்மை வாய்ந்த செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில்  22 தேசிய மொழிகளில், சமஸ்கிருதம் தவிர, அனைத்து மொழிகளும் ஏராளமானவர்களால் பேசப்படுகின்றன, படிக்கப்படுகின்றன, எழுதப்படுகின்றன. ஆனால் நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க  தொன்மையான, வளமையான, கலாசார, இலக்கிய, விஞ்ஞான, தொழில் நுட்பங்களை அள்ளித்தரும், செம்மொழியான சமஸ்கிருதம் மிகக் குறைந்த எண்ணிக்கை மக்களாலேயே படிக்கப்படுகின்றது. நமது நாட்டில் இச்செம்மொழி அழியாமல் இருக்க இதைப் படிக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று இத்திட்டம் அறிவித்துள்ளது சரியானதே.

மாற்றுப் பள்ளியாமே?

ஊர்விட்டு ஊர் மாறிவரும், மாநிலம் விட்டு மாநிலம் வரும் ஏழைத் தொழிலாளர்கள்  படிக்க வசதி செய்து தருவதே மாற்றுப் பள்ளி. பள்ளிக்கே செல்லாமல் சற்று வளர்ந்து விட்ட ஏழைக் குழந்தைகளுக்கும் மன, உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் மாற்றுப் பள்ளி அவசியம்.  இது சரியான திட்டமே.

யோகா திணிப்பு?

உடற்பயிற்சி, விளையாட்டு, என்.சி.சி, கலைக் கல்வி, கைத்தொழில், இலக்கியம், யோகா போன்றவைகளுக்கு இணைப் பாடத்திட்டதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டது எப்படி தவறாகும்? மருந்தில்லாமல் உடல் நலம் பேண உன்னதமான யோகக் கலையை உலகமே கொண்டாடுகின்றது.

நிறை

  • அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்விச்சட்டம் உறுதி செய்யும்.
  • தேசிய திறந்தவெளி பள்ளித் திட்டத்தின்படி (National Institute of  Open  Schooling) மாணவர்களுக்கு எந்தப் பாடம், எந்த மொழி என்பதை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளதால், இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையொட்டி, காமராஜர் காலத்திலிருந்த பொதுக்கணிதம், சிறப்புக் கணிதம் தேர்ந்தெடுப்பது போல், பத்தாம் வகுப்பல் ‘ஏ’ பாடம் ‘பி’ பாடம் எனத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிமை வழங்குவது மிக நல்லது. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மனச்சுமையின்றி மேற்படிப்பு படிக்க இது பெரிய அளவில் உதவி புரியும்.
  • தொழிற் கல்வி படித்தவர்கள், பத்து பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதோர், உயர்கல்வியை முதன்மை வகையிலேயே (Main Stream) தொடர  வழிவகை செய்திருப்பது.
  • ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பாடத்திட்டம் திருத்தியமைத்தல், இதை ஒட்டி ஆசிரியர்களுக்கு கல்வித் திறனை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மேம்படுத்துதல் போன்றவை மிகச் சிறந்தது.
  • குழந்தைகள், இளைஞர்கள், வயது வந்தோர் ஆகியோர் தொடர்ந்து படிக்க வழிவகை செய்தல்.
  • கணினி முறைக் கல்வி, உருப்போட்டுப் படிக்காமல், ஆழ்ந்து நுணுக்கமாகப் படித்தல். வேலைக்கான தகுதி, திறமை வளர்த்தல் போன்றவை மிகவும் பாராட்டுக்குரிய அம்சங்கள்.
  • 100 கல்லூரிகளுக்குள்ளாக மட்டுமே ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைப்பு என்ற கருத்து பல்கலைக் கழக நிர்வாகத்தை மேம்படுத்தும்.

குறை

மிகச் சிறந்த 200 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சில இந்தியாவிற்குவரலாம் என்பது மேம்போக்காக நல்லதாகத் தோன்றினாலும், அவர்களுக்குப் பல்வேறு அபரிமிதமான சலுகைகள், பேராசிரியர்களுக்கு வரியில்லாச் சம்பளம் போன்றவைகளும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகமென்றால் இடஒதுக்கீடு இருக்காது என்பதும் பெருங் குறைகளாகத் தோன்றுகின்றன.

அதே நேரத்தில் நமது மிகச் சிறந்த பல்கலைக் கழகங்கள் வெளிநாட்டில் தடம் பதிக்கலாம் என்பது  நல்லதே. இதையொட்டி, ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துவது நல்லது. தரமான கல்விக்காக ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் மாணவர்கள், ரூ.86,000 கோடி அந்நிய செலாவணியை செலுத்தி வெளிநாட்டில்சென்று படிக்கிறார்கள் என்பதும், ‘ஆன்லைன்’ மூலம் இங்கிருந்து எந்தப் பல்கலைக் கழகத்திலும் படிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்விக்காக பொருளாதாரத்தில் 6% ஒதுக்குவோம் என கூறிவிட்டு, புதிய அரசுப் பல்கலைக் கழகங்கள் திறக்கப்பட மாட்டாது என்றால், தனியார் மயத்தை முழுவதும் அரசு  கொண்டு வருகின்றது என்பது பொருள். ஒருபுறம் தனியார் கல்வியால் பொருளாதார, சமூக நீதிகள் கிடைக்காத நாடுகளைச் சாடிவிட்டு, மறுபுறம் அதே கொள்கையைக் கடைபிடிப்பேன் என்பது முற்றிலும் தவறானது.

(கட்டுரையாளர் சென்னைவாழ் கல்வியாளர்)

 

பரந்த அளவில் பரிசீலனை

கல்வி கொள்கை குறித்து ஆன்லைன் மூலம் 29,000 கருத்துக்கள் பெறப்பட்டன. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கிராம பஞ்சாயத்து, நகர முனிசிபாலிடி, முதல் 36 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களின் கருத்துக்கள், யூஜிசி, ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.இ.ஆர்.டி, பல்கலைக்கழகங்கள் கல்வியாளர்கள் என பல்வேறு அமைப்புக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. 33 தலைப்புகளில் கருத்துக்கள் கேட்கப்பட்டு தொகுக்கப்பட்டு, பிறகு இந்த வரைவு தேசியக் கல்விக் கொள்கை பொதுமக்கள் மத்தியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்விக் கொள்கை முகவுரையில், இந்திய நாட்டின் குருகுலக் கல்வி, வேதக் கல்வி அடிப்படையில் அமைந்தது என குறிப்படப்பட்டுள்ளதும்  குரு சிஷ்ய உன்னதமான உறவு பற்றியும் ஒரு சிறிய பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கல்வி காவி மயமாக்குதல் எனப் பேசுவது அபத்தம்.

எதிர்ப்புக் குரல்

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினைக் கருத்திற்கொண்டும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பினைக் கருதியும் பள்ளிக் கூடங்களில் அதனைக் கற்பிப்பதற்கு வசதி செய்யப்படும். பல்கலைக் கழக நிலையில் அம்மொழியைக் கற்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய நாடு பல்வேறு மொழிகள், சமயங்கள், பண்பாடுகள் நிறைந்த பன்முகம் கொண்டது. இங்கே ஒரு மொழியை மட்டும் முன்னிலைப்படுத்துவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. வடமொழியான சமஸ்கிருதத்திற்குத் தரும் மரியாதையை தென்மொழியாகிய தமிழுக்கும் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

– தினமணியில் உதயை மு.வீரையன்

 

ஆதரவுக் குரல்

* 8-வது வகுப்புக்கு பதிலாக, 5-வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, அதற்குப்பிறகு 6-வது வகுப்பில் இருந்து ‘பாஸ்-பெயில்’ உண்டு. அதிலும் 2 ஆண்டுகள் தொடர்ந்து பெயிலானால் அதே வகுப்பில் படிக்க முடியாது. அதன்பிறகு மாற்றுக்கல்விதான் (அதாவது தொழிற்கல்வி).

* பள்ளிக்கூட படிப்புகளில் சிறந்து விளங்கும் ஏழைக் குடும்பங்கள், சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர்படிப்புக்காக உதவித் தொகை வழங்க வேண்டும்.

* ஆசிரியர் தேர்வுக்காக இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிபோல, இந்திய கல்விப்பணி முறை அமலுக்கு வரவேண்டும், தொடக்க வகுப்புகளில் தாமொழி வாயிலாகவே கல்வி இருக்கவேண்டும்.

* அனைத்து மாநிலங்களும் விரும்பினால் தாமொழியையோ, வட்டார மொழியையோ பயிற்று மொழியாகக் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்கலாம். உலக அளவிலான அறிவைப் பெறுவதற்கு ஆங்கில அறிவு முதன்மையான பங்கு வகிக்கிறது. எனவே குழந்தைகளை ஆங்கில மொழியில் வாசிக்கவும் எழுதவும் வல்லமை பெற்றவர்களாக ஆக்க வேண்டும்.

– வி. கிருஷ்ணமூர்த்தி

 

 

மத்திய அரசுக்கு ’அழகுகாட்டும்’ தமிழகத்தில்

மெலிந்து வருகிறாள் சரஸ்வதி

தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. 1,20,000 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008-09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது. அதேபோன்று, நடுநிலைப்பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த, 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைவால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1,500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2,000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும் 11,000 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், படிப்படியாக 2,000 பள்ளிகளை, அக்கம்பக்கத்திலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்

(இது 2015 பிப்ரவரி நிலவரம். இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை )

நன்றி; விஜயபாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...