புதிய நண்பர்கள் இருவரை விட ஒரேஒரு பழையநண்பர் மேலானவர் என பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், கோவாவில் நடைபெறும் 2 நாள் பிரிக்ஸ்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து ஆலோசித்தனர். பின்னர், அங்கு இருந்தபடியே கூடங் குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகள் கட்டுமானத்துக்கு காணொலிகாட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பணியைத் தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
3-வது மற்றும் 4-வது அணு உலைகளுக்கு அடிக்கல்நாட்டுவது அணுசக்தித் துறையில் ரஷ்யா – இந்தியா இடையேயான ஒற்றுமையையே வலியுறுத்துகிறது எனப் பிரதமர் கூறினார்.
மோடி மேலும் பேசும் போது, "புதினுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டேன். இந்தியா மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய ஆதாரம்.
இந்தியாவின் பழைய நண்பர் ரஷ்யா. புதிய நண்பர்கள் இருவரை விட ஒரே ஒருபழைய நண்பர் மேலானவர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ரஷ்யா இந்தியாவை பிரதிபலிக்கிறது. எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதை வரவேற்கிறேன்.
பயங்கர வாதிகளையும், அவர்களுக்கு துணை போபவர் களையும் இந்தியாவும், ரஷ்யாவும் எள்ளளவும் பொருத்துக் கொள்ளாது" என்றார்.
16 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஆந்திரா ஸ்மார்ட் நகரத்திட்டம்
ஆந்திராவில் கப்பல் கட்டுமானமையம் அமைத்தல்
ஹரியாணா ஸ்மார்ட் நகரத்திட்டம்
ரோஸ்நெஃப்ட் – எஸ்ஸார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள்
ரோஸ்நெஃப்ட் – ஓவிஎல் எரிசக்தி ஒப்பந்தம்
நாக்பூர் – செகுந்தராபாத் அதிவிரைவு ரயில்திட்டம்
Ka226 ரக ஹெலிகாப்டர் ஒப்பந்தம்
2016-17 ஆண்டுக்கான எரிசக்தித்துறை ஒப்பந்தம்
இந்திய – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனைக்கான முன்னேற்பாடு திட்டம்
சைபர் பாதுகாப்பு
400$ மதிப்பளவிலான ஏவுகணை ஒப்பந்த திட்டம் உள்ளிட்ட 16 ஒப்பந்தங்கள் இந்தியா – ரஷ்யா இடையே இன்று கையெழுத்தானது.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.