* நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
* இனி, இந்த நோட்டுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது; அவை வெறும், வண்ண காகிதங்களே
* 100, 50, 20, 10, 5, 2 மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, 1 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் வழக்கம் போல் செல்லுபடியாகும்
* கையில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றிக் கொள்ள, 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதாவது, டிசம்பர், 30 வரை மாற்றி கொள்ளலாம்
* நவம்பர், 10 முதல், டிசம்பர், 30ம் தேதி வரை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம்
* புதிய டிசைனில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உடைய புதிய, 2,000 மற்றும், 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி நேற்று அறிமுகம் செய்தது; இவை, 10ம் தேதி முதல் புழக்கத்துக்கு வருகிறது
* ஏ.டி.எம்.,களில் இனி, அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து,நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக, 10 ஆயிரம் ரூபாயும்,ஒரு வாரத்தில், அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்
* இன்று அனைத்து வங்கிகளும், கருவூலங்களும் மூடப்பட்டிருக்கும். இன்றும், நாளையும், ஏ.டி.எம்.,கள் செயல்படாது* 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செலுத்தி கொள்ளலாம் அல்லது அதன் மதிப்புக்கு மற்ற நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்
* இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு, அரசு கொடுத்துள்ள, வருமான வரி நிரந்தர கணக்கு எனப்படும், 'பான்' அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது தேர்தல் அட்டையை பயன் படுத்தலாம்
* நவம்பர், 10 முதல், நவம்பர், 24ம் தேதிவரை, நாள் ஒன்றுக்கு, அதிக பட்சமாக, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்
* இந்த காலகட்டத்தில், கையில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் முதலீடு செய்வதற்கு எந்த உச்சவரம்பும் இல்லை
* டிசம்பர், 30ம் தேதிக்குள் மாற்ற முடியாத, 1,000, 500 ரூபாய் நோட்டுகளை, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி அறிவிக்கும் இடங்களில், கால தாமதத் துக்கான காரணத்தை தெரிவித்து மாற்றிக்கொள்ள முடியும்
* நவம்பர், 11, 12ம் தேதிவரை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, விமானம், ரயில்வே டிக்கெட், அரசுபஸ்கள், மருந்தகங்களில் பயன்படுத்த முடியும்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.