பாஜக என்பது தொண்டர்கள் சார்ந்த கட்சி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து இன்னமும் முடிவு செய்யப் படவில்லை என்று அக்கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.


உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமித்ஷா கலந்துகொண்டார்.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கோ அல்லது கட்சியின் மூத்த தலைவர் யோகி ஆதித்ய நாத்தோ முன்னிறுத்தப் படுவார்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:


பாஜக என்பது தொண்டர்கள் சார்ந்தகட்சி. இங்கு உள்கட்சி ஜனநாயகம் எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்த தனி நபரை தலைவராக்குவது எங்கள் வழக்கமல்ல. எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் கடுமையாக வியர்வை சிந்தி உழைக்கவேண்டும். தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் உள்கட்டமைப்பு வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கான வசதிகள் மற்றும் சிறப்பான சட்டம்- ஒழுங்கு ஆகிய 3 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


செயலாக்க அடிப்படையிலான அரசியலில் பாஜகவுக்கு நம்பிக்கை உள்ளதேதவிர யாரையும் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதில் இல்லை.மாநில அரசு மக்கள் நலனுக்கானதாக இருக்கவேண்டும்; குடும்பத்தினர் நலனுக்காக இருக்கக் கூடாது.ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிமுகப்படுத்தவில்லை.


எனவே இந்த உத்தரப் பிரதேச மாநிலத்தேர்தலில் யாரையாவது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தலாமா? வேண்டாமா? என்பதுகுறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...