பழைய 500. 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி வெளியிட்டஅறிவிப்புக்கு பில்கேட்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கள்ளநோட்டு மற்றும் கருப்புபணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் நாடுமுழுவதும் வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லிவந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரை சந்தித்த பில்கேட்ஸ், பின்னர் பேசுகையில் மோடியின் முடிவை வெகுவாகபாராட்டினார். ரூபாய் நோட்டுக்கள் வாபஸ்பெறப்பட்டதன் மூலம் நிழல் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான பொருளாதாரம் வலுப்பெறும் என்றுதெரிவித்தார்.
மேலும், தொழில் நுட்பத்தை அதிகம் நம்புபவன் நான் என்று கூறிய பில்கேட்ஸ் மக்கள் அதை பயன்படுத்தும் போதுதான் தொழில்நுட்பம் அதிகளவு வலுப்பெறும் என்று தெரிவித்தார். உலகநாடுகள் எதுவும் செய்யாத ஒன்றை இந்தியா முயற்சித் துள்ளதாகவும் பில்கேட்ஸ் கூறினார். தற்போது, பெரியபிரச்னைகளை தீர்க்கும் அளவுக்கு திறமைபெற்ற அரசை இந்தியா பெற்றுள்ளது என்றார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.