ஊழல் மற்றும் கருப்புப்பணம் மூலமே அதிக பணப்புழக்கம் நடக்கிறது, இதனால் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை பின்பற்றி வலுவான இந்தியாவை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும்.
21-வது நூற்றாண்டில் ஊழலுக்கு இடமில்லை என்ற நிலையினை ஏற்படுத்த வேண்டும். ஊழல் நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்கிறது , ஏழை-எளிய நடுத்தர மக்களின் கனவுகளை சிதைக்கிறது. நாட்டில் அதிக அளவில் ஊழல் மற்றும் கருப்புப்பணம் புழக்கத்தில் இருந்து வருகிறது, இதனை ஒழிக்கவே 500, 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது .
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு வழியுருத்துகிறேன். இதனை பின்பற்ற அனைத்து மக்களும் முன் வர வேண்டும் , இளைஞர்கள் இந்த நடவடிக்கையை பின்பற்றுமாறு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் . தற்போது நடமாடும் வங்கிகள் மற்றும் மொபைல் பண காலத்தில் வாழ்ந்து இருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் மொபைல் மூலமே செய்துவருகிறோம்.
அதாவது, உணவுப் பொருள்கள், வாடகை வாகன பதிவு, வீட்டு உபயோகப் பொருள்கள் கொள்முதல் என அனைத்தும் கைப்பேசி மூலமே ஆர்டர் செய்து வருகிறோம். தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்து நமது வாழ்க்கை மிக சௌகரியமாக மாறியிருக்கிறது. ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிக்கடன் அட்டைகளும் கிடைக்கின்றன. எனவே, உங்களில் பெரும்பாலானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றீர்கள் என தான் நம்புகின்றேன்.
அதனால்தான் உங்களிடம் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் வழிகள் குறித்து பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நவம்பர் 8 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு சிறுவணிகர்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை வழக்க நல்லதொரு வாய்ப்பு . இது வணிகசமூகம் தங்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்கவாய்ப்பு ,
அவர்களும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை பின்பற்றி செழிப்படைய இயலும் . அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளான 500, 1000 செல்லாது என அறிவிக்கும்போது இதனால் மக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பார்கள் என்பதை நான் அறிவேன் , இருப்பினும் இந்த குறுகிய கால இடர்களை நீண்டகால பலன்கருதி மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
நீண்ட கால நலன் கருதி இந்தக் குறுகியகால இன்னல்களை ஏற்றுக் கொண்டுள்ள மக்களை நினைத்து சந்தோஷம் கொள்கிறேன் . உத்தரப் பிரதேசம் கோவா பஞ்சாப் கர்நாடக மாநிலங்களில் சமீபத்தில் ஊரகமக்களைச் சந்தித்து பேசும்வாய்ப்பு கிடைத்தது , அப்போது அவர்களிடம் கருப்புபணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்று கேட்டேன் ஆம் என்று அவர்கள் கூறினார்கள்.
நன்றி நரேந்திர மோடி
பாரத பிரதமர்
Leave a Reply
You must be logged in to post a comment.