வெளிநாட்டுப் பயணங்களில் அரசு நிகழ்ச்சியை புறக்கணித்தால் உங்கள் பெயர் புறக்கணிக்கப்படும்

அலுவல் பூர்வமாக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடுதிரும்பியதும் தங்களின் பயணம்தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை அளிக்கவேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் புதியகட்டுப்பாடு விதித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்குழு நல்லெண்ணப் பயணமாக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வது வழக்கம். அந்நாட்டு நாடாளுமன்ற நடைமுறைகள், கலாசாரம், பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்டவை பற்றி அறிய இது போன்ற பயணங்கள் உறுப்பினர்களுக்கு வாய்ப்பாக அமையும்.


இந்நிலையில், பாஜகவை சேர்ந்த இருநாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இருவேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போது திட்டமிட்டபடி அலுவல் பூர்வ நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டனர்.
இரு மாதங்களுக்கு முன் நார்வே நாட்டுக்கு அரசுமுறைப்பயணமாக இந்திய எம்.பி.க்கள் குழுசென்றது. ஆனால், அங்கு அரசு நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்த பாஜக உறுப்பினர், அச்சமயம் அந்நாட்டில் இருந்த முன்னாள் எம்.பி. ஒருவரை சந்தித்துப் பேசினார்.


ஆஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பாஜகவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அரசுமுறைப் பயணமாக சென்ற போது, அரசு நிகழ்வுகளில் பங்கேற்காமல் தனது நண்பர்களுடன் ஹோட்டல் அறையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு உறுப்பினர்களின் நடவடிக்கையை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் கவனத்துக்கு வெளியுறவுத் துறை கொண்டுசென்றது.


இதைத்தொடர்ந்து, "எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு அலுவல்பூர்வ பயணம்மேற்கொண்டால், அவர்களின் பயணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தனக்கு உடனடியாக வழங்கவேண்டும்' என்று மக்களவைச் செயலகத்துக்கு சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது சம்பந்தப்பட்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் அரசுநிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்க்கும் உறுப்பினர்களின் பெயரை, அடுத்தமுறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, மக்களவைச் செயலகம் கவனத்தில் கொள்ளாது தவிர்க்கலாம் என்றும் சுமித்ரா மகாஜன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...