ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர், யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவது என்பதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இழுபறிநீடித்தது. இதனால், 3 மற்றும் 4-ந் தேதிகளில் மீண்டும் ஆலோசனை நடத்த முடிவுசெய்யப்பட்டது.
நாடுமுழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரேவரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மசோதா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.
இந்த வரி விதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜிஎஸ்டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 4 வகையான ஜிஎஸ்டி. வரி விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டி. வரியை அமல்படுத்து வதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடுவழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். தமிழக அரசின்சார்பில், அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி அமலாக்கம் தொடர்பான மத்திய ஜி.எஸ்.டி. வரி வரைவுமசோதா, மாநில ஜி.எஸ்.டி. வரி வரைவு மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கான இழப் பீட்டை 3 மாதங்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக, இருமாதங்களுக்கு ஒருமுறை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோரை மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் இயங்கச்செய்வதா? அல்லது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கச்செய்வதா என்பது பற்றி கருத்து ஒற்றுமை ஏற்பட வில்லை. இவ்விஷயத்தில் இழுபறி நீடித்துவருகிறது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரிமசோதா குறித்தும் முடிவு எட்டப்பட வில்லை.
நான்கு, ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே இழப்பீடுதேவைப்படும் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, மேலும் பலமாநிலங்கள் இழப்பீடு கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தசிக்கல்கள் குறித்து ஜனவரி 3 மற்றும் 4-ந் தேதிகளில் மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டம் முடிவடைந்தபிறகு, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வந்துவிடுமா?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘என்னால் இயன்ற அளவுக்கு முயன்று வருகிறேன்’ என்று அவர் கூறினார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.