இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்

பிரதமர் நரேந்திரமோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்டகஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளார்கள். தீமையை அழிக்க மக்கள் சபதம் ஏற்றால் விளைவுநன்றாக இருக்கும் என்பதற்கு நமது நாடு உதாரணம். நவம்பருக்குபின் புதிய சவால்கள் மக்களுக்கு காத்திருந்தன. ஆனால் ஊழல் பிரச்சனைகளை அகற்ற போராடுகிறோம் என்ற உணர்வு அனை வரையும் ஒன்றிணைத்தது.

ஊழலை ஒழிக்கவும் ஏழைகள் நலம்பெறவுமே பண மதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், நேர்மை மரபு காப்பாற்றப் பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர். கறுப்புபணம், கள்ளச்சந்தை, விலை வாசியால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கறுப்புபண ஒழிப்பால் நீண்ட நாட்களுக்கு பயன் கிடைக்கும். எனவேதான், பணமதிப்பிழப்புக்கு நாட்டுமக்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். பணப் பற்றாக் குறை கிராமங்களில் விரைவில் சரி செய்யப்படும். வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்

பணபரிமாற்றத்தை மக்கள் நிறுத்த வேண்டும். டிஜிட்டலுக்கு மாறவேண்டும். மக்களின் பணம் வங்கிக்கு வந்தால் நாட்டுக்கு வளர்ச்சிகிடைக்கும். காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் மக்களை பாராட்டுவர். ஏழைகளை முன்னேற்ற இதுபோன்ற நடவடிக்கைதேவை. இந்தியர்கள் தியாகமும், பொறுமையும் உலகிற்கே ஒரு உதாரணம்.

 

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தவறுசெய்த வங்கி அதிகாரிகளை நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். சாமானிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான் போராடி வருகிறோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அரசு கொண்டுவந்த வருமான ஒப்புதல் திட்டத்தில் ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளது என மொத்தம் 24 லட்சம்பேர்தான் ஒப்புக் கொள்கின்றனர். தற்பொழுது அரசு எடுத்த நடவடிக்கை தேசத்தின் வருங் காலத்துக்கு மிகவும் பயன்தரும்.

இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந் சில அம்சங்கள்:

*மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட்செய்தால் 8 சதவீதம் வட்டிவழங்கப்படும்
 
*கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்இந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டுவரப்படும்.
 
*சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்வழங்கப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.
 
*சொந்த வீடுகட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய்வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். ரூ.12 லட்சம் வரை கடன்பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும்.
 
*விவசாயிகளின் குறிப்பிட்ட சிலகடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். வங்கிக்கடன் பெற்று விதைக்கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும்.
 
*சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன்வரம்பு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...