பட்ஜெட் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள் பிதற்றி வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார்.
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்தெரிவித்ததாவது: பட்ஜெட் என்பது நாட்டுமக்களை பற்றியும், அவர்களது எதிர் காலத்தை பற்றியுமானது. பட்ஜெட் தாக்கல்செய்வதை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? பட்ஜெட் வேண்டாம் என்றால் வளர்ச்சியோ, முன்னேற்றமோ வேண்டாம் என்பதேபொருள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறீர்களா?
மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதால், எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. முதலில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்த அவர்கள், தற்போது, பட்ஜெட்கூட்டத்தை தள்ளி வைக்க கோருகின்றனர். தோல்விபயத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் பிதற்றி வருகின்றனர். மக்கள் விரோதப் போக்கை அவர்கள் கடைபிடித்தால், இறுதியில் அது அவர்களை நோக்கியேதிரும்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.